News July 4, 2025
அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை அறிவிப்பு

தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் 2025-2026 ஆம் ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்பிற்கான சேர்க்கைக்கான 3ஆம் கட்ட கலந்தாய்வு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி வரும் ஜூலை.07ஆம் தேதி அனைத்து பாடப்பிரிவுகளும் கலந்தாய்வு நடைபெற உள்ளது. புதிய கலையரங்கத்தில் காலை 10.30 மணி முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க
Similar News
News July 5, 2025
சமூக நல்லிணக்க ஊராட்சி விருது பெற விரும்புவோர்

சாதிபாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தையும், சமூக ஒற்றுமையினையும் கடைப்பிடிக்கும் ஊராட்சிகளை ஊக்குவித்து கௌரவிக்கும் வகையில், 10 ஊராட்சிகளுக்கு சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுடன் ரூ. 1 கோடி வழங்கப்பட உள்ளது. அதன்படி தருமபுரியில் வரும் 2025ஆம் ஆண்டிற்காக விருது பெற விரும்புவோர் விண்ணப்பப் படிவத்துடன், அதற்குரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்கள் மேலே உள்ள புகைப்படத்தை பார்க்கவும்
News July 5, 2025
தர்மபுரியில் போலீசார் ரோந்தில் ஈடுபாடு

தர்மபுரி மாவட்டத்தில் இன்று இரவு முழுவதும் காவல்துறை ரோந்து பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாவட்ட இரவு ரோந்து அலுவலராக திரு.பி.ராமமூர்த்தி, அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். தர்மபுரி, அரூர், பென்னாகரம் மற்றும் பாலக்கோடு ஒவ்வொரு காவல் நிலையத்துக்கும் பொறுப்பான போலீஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு காவல் நிலையத்திற்கான தொடர்பு எண்களும் வெளியிடப்பட்டுள்ளன. தொடர்பு எண்கள் மேலே உள்ளது.
News July 4, 2025
ஏரியூரில் திமுக உறுப்பினர் சேர்க்கை பயிற்சி

தருமபுரி கிழக்கு மாவட்டம் ஏரியூர் கிழக்கு ஒன்றியம் திமுக BDA நிர்வாகிகளுக்கு ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை பயிற்சி இன்று (ஜூலை 4) நடைபெற்றது. இந்த நிகழ்வானது ஏரியூர் ஒன்றிய திமுக செயலாளர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில், திமுக ஏரியூர் ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.