News July 4, 2025
இந்த ரேஷன் கார்டுகள் செல்லாது?

ஜூன் 30-க்குள் கை விரல் ரேகை பதியாத ரேஷன் அட்டைகள் செல்லாது என்ற செய்தி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக, ரேஷன் உதவிகள் கிடைக்க KYC சரி பார்ப்பது அவசியம் என்றும் ஆதார், மொபைல் எண், கைரேகை, இறந்தவர்கள் பெயர் நீக்கம் போன்றவற்றை அப்டேட் செய்யாவிட்டால் ரேஷன் கார்டு செல்லாது என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், இது தவறான செய்தி, மக்கள் நம்ப வேண்டாம் என TN Fact Check விளக்கமளித்துள்ளது.
Similar News
News July 5, 2025
வரலாற்றில் இன்று

1954 – பிபிசி தனது முதல் டிவி செய்தியை ஒளிபரப்பியது. 1971 – அமெரிக்காவில் வாக்களிக்கும் வயது 18 ஆகக் குறைக்கப்பட்டது. 1977 – பாகிஸ்தானில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலாவது PM சுல்பிகார் அலி பூட்டோ பதவி இழந்தார். 1996 – குளோனிங் முறையில் டோலி என்ற ஆடு ஸ்காட்லாந்தில் பிறந்தது. 1998 – செவ்வாய்க் கோளுக்கு ஜப்பான் தனது முதலாவது விண்கலத்தை ஏவியது.
News July 5, 2025
தேசிங்கு ராஜா 2 டிரெய்லர்.. செதச்சிட்டீங்க போங்க…

விமல் நடிப்பில் தேசிங்கு ராஜா 2 படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ள நிலையில் அதனைப் பார்த்த ரசிகர்கள் அப்செட் ஆகி இருக்கின்றனர். இந்த டிரெய்லர் எவ்ளோ தடவ பாத்தாலும் சிரிப்பே வரல என கமெண்ட் செய்து வருகின்றனர். வித்யாசாகர் இசை தவிர டிரெய்லரில் எதுவும் இல்லை என ரசிகர்கள் ஆதங்கப்படுகின்றனர். தமிழின் சிறந்த காமெடி படங்களில் ஒன்றான தேசிங்கு ராஜா பெயரையாவது விட்டு வச்சிருக்கலாமே..!
News July 5, 2025
IND Vs BAN கிரிக்கெட் தொடர் மாற்றம்?

வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து இந்தியா ஆக.17, 20 & 23-ல் ஒருநாள் மற்றும் 26, 29 & 31 ஆகிய நாள்களில் டி20 போட்டிகளில் விளையாட இருந்தது. அங்கு நிலவும் அரசியல் சூழலால் நிறுத்தப்பட்டுள்ளது. இந்திய அணி வங்கதேசம் செல்ல முடியாத நிலையில், ஏன் வங்கதேச அணியை இந்தியாவுக்கே அழைத்து கொல்கத்தா, ராஞ்சி போன்ற நகரங்களில் தொடரை நடத்தக்கூடாது என ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.