News July 4, 2025
திருச்சி மாவட்ட விவசாயிகளுக்கு கலெக்டர் அழைப்பு

திருச்சி மாவட்டத்தில் விவசாய பயிர்கள் சாகுபடியில் எதிர்பாராத இயற்கை இடர்பாடுகள் ஏற்பட்டால், அதிலிருந்து விவசாயிகளை பாதுகாக்க ஏதுவாக, பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 2025-26 ஆம் ஆண்டுக்கான காரீப் பருவத்தில் ஷீமா இன்சூரன்ஸ் கம்பெனி என்ற காப்பீடு நிறுவனத்தால் பயிர்க்காப்பீடு செயல்படுத்தப்படவுள்ளது. எனவே விவசாயிகள் அனைவரும் தவறாமல் காப்பீடு செய்து கொள்ள கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்.
Similar News
News August 20, 2025
திருச்சி: கோழி பண்ணை அமைக்க 50% மானியம்

மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் தமிழக அரசு சார்பில் கோழி பண்ணை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் 250 கோழி குஞ்சுகள் வீதம் இலவசமாக வழங்கப்படுகின்றன. மேலும் கோழி கொட்டகை, உபகரணங்கள், 4 மாதங்களுக்கு தேவையான தீவனம் என மொத்த செலவில் 50 % மானியமும் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் தங்கள் அருகிலுள்ள கால்நடை மருத்துவமனையில் விண்ணப்பிக்லாம். ஷேர் பண்ணுங்க <<17460250>>தொடர்ச்சி<<>>
News August 20, 2025
திருச்சி: கோழி பண்ணை அமைக்க 50% மானியம் (2/2)

▶️ இத்திட்டத்தில் விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 625 சதுர அடி நிலம் சொந்தமாக இருக்க வேண்டும்
▶️ மின் இணைப்பு இருக்க வேண்டும்
▶️ ஏற்கனவே நாட்டுக்கோழி திட்டத்தின் கீழ் பயனடைந்த பயனாளிகள் மற்றும் குடும்பத்தினர் மானியம் பெற தகுதி இல்லை
▶️ தேர்வு செய்யப்படும் பயனாளி 3 வருடங்களுக்குக் குறையாமல் பண்ணையைப் பராமரிக்க உறுதி அளிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!
News August 20, 2025
திருச்சி: ரயில் பயண சீட்டு விற்பனை முகவர் வேலை

திருச்சி மாவட்டத்தின் குமாரமங்கலம், கல்பட்டிசத்திரம், கொளத்தூர் ஆகிய ரயில் நிலையங்களில் பயண சீட்டு விற்பனை முகவர் வேலைக்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு திருச்சி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும். விருப்பமுள்ளவர்கள் <