News July 4, 2025
வரதட்சணை கொடுமை வழக்கு: ரிதன்யாவின் மாமியார் கைது

அவிநாசியைச் சேர்ந்த புதுமணப் பெண் ரிதன்யா தற்கொலை வழக்கில் அவரது மாமியார் சித்ரா தேவியை தனிப்படை போலீசார் கைது செய்தனர். வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து ரிதன்யாவின் ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் ஏற்கனவே ரிதன்யாவின் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Similar News
News July 6, 2025
மராட்டிய எழுச்சி.. பாஜக மீது ஸ்டாலின் காட்டம்

TN புதிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் நிதி ஒதுக்குவோம் என கூறிய பாஜக, தங்கள் ஆட்சியிலுள்ள மகாராஷ்டிராவில் மக்கள் எழுச்சியை கண்டு பின்வாங்கியுள்ளதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்தித் திணிப்புக்கு எதிராக உத்தவ் தாக்கரே தலைமையில் நடந்த பேரணி எழுச்சி மிகுந்தது என கூறியுள்ளார். உ.பி., ராஜஸ்தானில் 3வது மொழி என்ன? என்ற ராஜ்தாக்கரே கேள்விக்கு பாஜகவிடம் பதில் இருக்காது எனவும் விமர்சித்துள்ளார்.
News July 6, 2025
வரலாற்றில் இன்று

1892 – தாதாபாய் நௌரோஜி பிரித்தானிய நாடாளுமன்றத்தின் முதலாவது இந்தியப் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1935 – சிங்கப்பூரின் தமிழ் நாளிதழ் தமிழ் முரசு ஆரம்பிக்கப்பட்டது. 1939 – நாட்சி ஜெர்மனியில் இருந்த கடைசி யூத தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டன. 2013 – போயிங் 777 விமானம் சான் பிரான்சிஸ்கோ ஏர்போர்ட்டில் விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்தனர், 181 பேர் காயமடைந்தனர்.
News July 6, 2025
மீண்டும் இணைந்த தாக்கரே பிரதர்ஸ்.. MH-ல் புதிய வரலாறு!

2006-ல் சிவசேனாவில் இருந்து விலகி MHS-யை தொடங்கிய ராஜ் தாக்கரே மீண்டும் உத்தவ் தாக்கரே(UBT) உடன் இணைந்துள்ளார். மராட்டியத்தில் இந்தி மொழி திணிப்புக்கு ‘மண்ணின் மைந்தர்கள்’ என்ற முழக்கத்தோடு கைகோர்த்திருக்கும் இருவரும் மும்பை மாநகராட்சிக்கு விரைவில் நடக்கவுள்ள தேர்தலில் சேர்ந்து களம் காண உள்ளனராம். இது, அங்கு ஆளும் பாஜக அரசுக்கு சற்று அதிர்ச்சியும், சிவசேனாவினருக்கு மகிழ்ச்சியையும் தந்துள்ளது.