News April 5, 2024
டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாள் விடுமுறை

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து கன்னியாகுமரி மாவட்டத்தில் வாக்குப்பதிவை முன்னிட்டு, ஏப்ரல் 17 முதல் 19ம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது. அதேபோல் வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4ம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு கருதி இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Similar News
News September 18, 2025
கன்னியாகுமரியில் ரூ.1085 கோடியில் திட்டம் தயார்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாசன கால்வாயை சீரமைக்க ரூ.1085 கோடி மதிப்பில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக நீர் பாசன துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் தோவாளை கால்வாய் ரு.189 கோடி, அனந்தனார் கால்வாய் ரூ.186 கோடி, நாஞ்சில் நாடு புத்தனார் கால்வாய் ரூ.189 கோடி, பட்டணம் கால்வாய் ரூ.60 கோடி, திற்பரப்பு கால்வாய் ரூ.15 கோடியிலும் சீரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.
News September 18, 2025
குமரியில் காய்ச்சல் காரணமாக மாணவி உயிரிழப்பு

குமரி மாவட்டம் பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் ஜினி தெரசா(22). இவர் திருவட்டார் பகுதியில் உள்ள ஹோமியோபதி கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கு காய்ச்சல் ஏற்பட்டு வந்த நிலையில் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். இது தொடர்பாக சுசீந்திரம் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
News September 18, 2025
குமரி மாவட்ட எஸ்பி பெற்றோர்களுக்கு எச்சரிக்கை

குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் படி மாவட்டம் முழுவதும் வாகன சோதனை நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற வாகன சோதனையின் போது 18 வயது நிறைவடையாத சிறுவர்கள் ஓட்டி வந்த ஆறு இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யபட்டது. அந்த இருசக்கர வாகனங்களை ஓட்டி வந்த சிறுவர்களின் பெற்றோர்களின் மீது வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது. இந்த நடவடிக்கை மேலும் தீவிரபடுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.