News July 4, 2025

வேலூர் மக்களே போலீஸ் அடித்தால் என்ன செய்யலாம் (1/2)

image

அஜித்குமார் என்ற வாலிபர் போலீசாரின் கண்மூடித்தனமான தாக்குதலால் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது. இதுபோன்று போலீசார் விதி மீறி நடந்து கொண்டால், மனித உரிமைகள் ஆணையத்தில்<> இந்த லிங்க்<<>> மூலம் அல்லது (044‑2495 1495) தொடர்பு கொண்டு புகார் செய்யலாம். மேலும், மாவட்ட எஸ்.பி-யிடமும் (0416-2232999) மாவட்ட மாஜிஸ்திரேட்டிடமும் புகார் செய்யலாம். இந்த எண்களை மற்றவர்களுக்கு தெரியப்படுத்துங்க. <<16937852>>தொடர்ச்சி<<>>

Similar News

News July 5, 2025

வேலூர் திமுக பிரமுகரை வெட்டிய 2 பேர் சிறையில் அடைப்பு

image

வேலூர் விரிஞ்சிபுரம் ஊராட்சி மன்ற தலைவர் குணசுந்தரியின் கணவரும் திமுக பிரமுகருமான பாலச்சந்திரன் நேற்றிரவு மர்ம நபர்கள் வெட்டியதில் படுகாயத்துடன் ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வழக்கு பதிந்த லத்தேரி போலீசார் (ஜூலை 4) விரிஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த ரமேஷ் (43) மற்றும் சீனிவாசனை (46) ஆகிய 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News July 5, 2025

வேலூர் காவல் துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் குடியாத்தம்,பேரணாம்பட்டு,கே வி.குப்பம்,அணைக்கட்டு மற்றும் திருவலம் முக்கிய இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பாக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு வந்து பணி செய்து வருகின்றனர். அதன்படி இன்று ( ஜூலை 4) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது.இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

News July 4, 2025

வேலூர் பயனாளிகளுக்கு விதை தொகுப்புகளை வழங்கிய கலெக்டர்

image

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூலை 4) வேளாண் மற்றும் வேளாண் விற்பனை வணிகத்துறையின் சார்பில் வேலூர் மாவட்டத்தில் 3 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து கலெக்டர் சுப்புலட்சுமி பயனாளிகளுக்கு காய்கறி மற்றும் பழச்செடி விதை தொகுப்புகளை வழங்கினார். இதில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!