News July 4, 2025

நாகை: விவசாயப் பொருட்கள் மானியத்தில் வழங்கல்

image

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இன்று (ஜூலை 4) வேளாண்மை உழவர் நலத் துறையின் சார்பில் “ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்” திட்டத்தை தொடங்கி வைக்கிறார். அத்திட்டத்தில் காய்கறி விதை, பழச்செடிகள், பயறு வகைகள் விதை தொகுப்பு, காளான் உற்பத்திக் கூடம் உள்ளிட்டவை மானியத்தில் வழங்கப்படுகிறது. அவற்றை நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக முதன்மை கூட்டரங்கில் இன்று ஆட்சியர் வழங்க உள்ளார்.

Similar News

News July 5, 2025

நாகப்பட்டினம் புதிய கடற்கரையில் தெருக்கூத்து

image

நாகப்பட்டினம் மாவட்ட நிருவாகம் வழங்கும் தெருக்கூத்து சத்தியம், தியாகம், பாரம்பரியம் சொல்லும் அரிச்சந்திரா நாடகம் நாகப்பட்டினம் புதிய கடற்கரையில் ஞாயிறு (ஜூலை 6) அன்று மாலை 5:30 முதல் 7:30 வரை நடைபெற உள்ளது. இதில் மக்கள் தவறாத கலந்து கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் வலியுறுத்தியுள்ளார்.

News July 4, 2025

மாங்கல்ய வரம் அருளும் வேதபுரீஸ்வரர்

image

நாகப்பட்டினம் மாவட்டம் தேரழுந்தூரில் அமைந்துள்ள வேதபுரீஸ்வரர் திருக்கோயில் ஒரு சிறப்பு வாய்ந்த திருத்தலமாகும். இங்கு மூலவராக அருள்பாலிக்கும் வேதபுரீஸ்வரர், திருமணத் தடைகளை நீக்கி, மாங்கல்ய வரம் அருளும் அற்புத தெய்வமாக போற்றப்படுகிறார். இவருக்கு வஸ்திரம் சாத்தி அபிஷேகம் செய்து வழிபட்டால் திருமண தடை நீங்குமென நம்பப்படுகிறது. நீண்ட நாட்களாக திருமணம் ஆகாத உங்கள் நண்பர்களுக்கு இதனை ஷேர் பண்ணுங்க!

News May 8, 2025

நாகை: வனத்துறையில் வேலை!

image

தமிழக வனத்துறையில் காலியாக உள்ள 257 வனக் காவலர், வனக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 18 முதல் 32 வயது வரை உள்ள, 10th, 12th முடித்தவர்கள்<> www.tnpsc.gov.in <<>>என்ற இணையதளம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கவும். சம்பளமாக மாதம் ரூ.16,600 முதல் ரூ.57,900 வரை வழங்கப்படும். அரசு வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு இதை SHARE செய்யவும்!

error: Content is protected !!