News July 4, 2025
மீன் வளர்ப்பு திறன் மேம்பாட்டு பயிற்சி பெற அழைப்பு

தஞ்சாவூர் அருகே சூரக்கோட்டையிலுள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் வளங்குன்றா நீருயிரி வளர்ப்பு மையத்தில் கிராமப்புற இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி ஜூலை 9 ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து 6 நாள்களுக்கு நடைபெற உள்ளது. வளங்குன்றா நீருயிரி வளர்ப்பு மையத்துடன் அட்மா திட்டத்தின் கீழ் இப்பயிற்சி நடைபெற உள்ளதாக வேளாண் இணை இயக்குநர் கோ.வித்யா தெரிவித்துள்ளார்.
Similar News
News July 5, 2025
தஞ்சாவூர் : இரவு ரோந்து போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று (04.07.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News July 4, 2025
கல்லூரி மாணவி தற்கொலை – இளைஞர் கைது

நரசிங்கம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் புவனேஸ்வரி என்ற மாணவியிடம், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாணவி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் குணசேகை கைது செய்தனர்.
News July 4, 2025
தஞ்சை: கை நிறைய சம்பாதிக்க ஒரு சூப்பர் திட்டம்?

தஞ்சையில் மக்களே படித்த படிப்புக்கு Skill இல்லாமல் வேலை இன்றி இருப்பவரா? தமிழக அரசு இலவச பயிற்சி அளித்து வேலைவாய்ப்பையும் வாங்கி தருகிறது. 12th முடித்திருந்தாள் போதும் விண்ணப்பிக்கலாம். பயிற்சியில் உங்கள் Skill வளர்த்துக்கொண்டு IT நிறுவனங்கலில் பணியாற்றலாம். இங்கே <