News July 4, 2025
புகார் அளிக்க வழிமுறைகள்

காவல்துறையினர் நியாயமற்ற சோதனை, பறிமுதல், தாக்குதல், வாய்வழி துன்புறுத்தல் அல்லது தொல்லை, சட்ட விரோத கைது அல்லது தடுப்புக்காவல், முறையான நடைமுறைகளை பின்பற்றத் தவறுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டால் மனித உரிமைகள் ஆணையம்/காவல் கண்காணிப்பாளர்/ மஜிஸ்திரேட்டிடம் புகார் அளிக்கலாம். புகார் செய்யும் போது சாட்சி கணக்குகள், மருத்துவ பதிவுகள் (காயமடைந்திருந்தால்), வீடியோ பதிவுகள் (இருந்தால்)
புகைப்படங்கள் தேவை.
Similar News
News July 4, 2025
காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்- எஸ்பி

கள்ளக்குறிச்சி அருகில் உள்ள கச்சிராயபாளையம் காவல் நிலையத்தில் இளைஞர் மீது போலீசார் தாக்குதல் நடத்திய வீடியோ வைரலாகியது. கடந்த மாதம் கொடுத்த தனது புகார் தொடர்பாக இன்று முறையிட சென்ற போது இளைஞரை போலீசார்கள் தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இளைஞர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
News July 4, 2025
விதை சேமிப்பு கிடங்கு திறப்பு விழா

வடக்கநந்தலில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் ரூ.60 லட்சம் மதீப்பீட்டில் 250 மெட்ரிக் டன் கொள்முதல் விதை சேமிப்பு கிடங்குதிறப்பு விழா தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் இன்று திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மலையரசன் ஆகியோர் ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.
News July 4, 2025
கள்ளக்குறிச்சி மக்களே போலீஸ் அடித்தால் என்ன செய்யலாம்

அஜித்குமார் என்ற வாலிபர் போலீசாரின் கண்மூடித்தனமான தாக்குதலால் உயிரிழந்த சம்பவம் மாநிலத்தையே உலுக்கியது. இதுபோன்று போலீசார் விதி மீறி நடந்து கொண்டால், மனித உரிமைகள் ஆணையத்தில் இந்த <