News May 8, 2025
விஸ்கி விலை குறைகிறது.. இனி மதுபிரியர்களுக்கு ஜாலி

இந்தியாவுக்கு விஸ்கியை அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடாக இங்கிலாந்து உள்ளது. இந்நிலையில், அந்நாட்டுடன் இந்தியா அண்மையில் தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதில் இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி ஆகும் மதுபானங்கள் மீதான வரி 75%ஆக குறைக்கப்பட்டுள்ளது. எனவே அந்நாட்டில் இருந்து இறக்குமதி ஆகும் ஸ்காட்ச், ஜின் விலை குறைகிறது. இதேபோல் விஸ்கியும் விலையும் கணிசமாக குறையவுள்ளது.
Similar News
News November 7, 2025
விஜய்யை முதல்முறையாக விமர்சித்த அதிமுக

திரைப்புகழைக் கொண்டு சிலர் மாய பிம்பத்தை உருவாக்குவதாக, விஜய்யை மறைமுகமாக கே.பி.முனுசாமி விமர்சித்துள்ளார். மக்களுடன் நேரடி தொடர்பு இல்லாமல் கட்டமைப்பை உருவாக்கிவிட்டதாக சிலர் நினைக்கின்றனர் எனவும் அவர் சாடியுள்ளார். தவெக தலைமையில் தான் கூட்டணி என விஜய் திட்டவட்டமாக அறிவித்ததால், விஜய்யை தாக்கி பேச அதிமுக தலைவர்கள் தொடங்கிவிட்டதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
News November 7, 2025
வாட்ஸ்ஆப் to பிற ஆப்களுக்கும் மெசேஜ் அனுப்பலாம்.. ஆனால்?

வாட்ஸ்ஆப்பில் இருந்து அரட்டை உள்ளிட்ட பிற மெசேஜிங் ஆப்களுக்கும், அந்த ஆப்களை டவுன்லோட் செய்யாமலேயே, மெசேஜ் அனுப்பும் வசதியை, மெட்டா பரிசோதித்து வருகிறது. டிஜிட்டல் துறையில் குறிப்பிட்ட நிறுவனத்தின் ஆதிக்கத்தை தடுக்க, ஐரோப்பிய யூனியன் சட்டங்களை கடுமையாக்கியதால், ஐரோப்பிய நாடுகளில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்தியாவில் அறிமுகப்படுத்துவது குறித்து மெட்டா எந்த தகவலையும் வெளியிடவில்லை.
News November 7, 2025
FULL MOON-ல் எத்தனை வகை இருக்குனு தெரியுமா?

நிலவு என்றாலே அழகு தான். அதிலும் பெளர்ணமி அன்று வானில் தோன்றும் முழு நிலவின் அழகை ரசிப்பது பலருக்கும் பிடித்தமான ஒன்று. இப்படி வரும் சில முழு நிலவுகளை நாம் சூப்பர் மூன், பிளட் மூன் என்றெல்லாம் அழைப்போம். அப்படி எத்தனை வகை முழு நிலவுகள் உள்ளன, அதன் பெயர் என்ன, காரணம் என்ன என்பது பற்றி அறிய மேலே SWIPE பண்ணுங்க…


