News May 8, 2025

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயன்பெறுங்கள்

image

நான் முதல்வன் திட்டம் மூலம், ஒன்றிய அரசின் SSC, RRB மற்றும் வங்கி பணிகளுக்கான தேர்வுகளுக்கு பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம். நான் முதல்வன் திட்டம் மூலம் பயிற்சி பெற விரும்புவோர் naanmudhalvan.tn.gov.in என்ற இணைதளத்தில் பதிவு செய்யலாம். நுழைவு தேர்வு மூலம், தேர்வு செய்யப்படும் 1,000 மாணவர்களுக்கு பயிற்சி, தங்குமிடம், உணவு இலவசவாக வழங்கப்படும். விண்ணப்பிக்க மே 13ம் தேதி கடைசி நாளாகும்.

Similar News

News December 28, 2025

கள்ளக்குறிச்சி: மனைவி பிரிந்த சோகம் – உயிரை எடுத்த மது!

image

கள்ளக்குறிச்சி: கரியப்பா நகரை சேர்ந்தவர் அப்பாஸ் முகமது (47). இவரது மனைவி, குடும்ப பிரச்சினையால் பிரிந்து தனியாக வசித்து வருகிறார். மனைவி பிரிந்து சென்ற கவலையால், அப்பாஸ் மது பழக்கத்திற்கு அடிமையாகினார். தினந்தோறும் குடித்து குடித்து அவரது உடல்நிலை மோசமாகியது. பின்னர் உறவினர்களால் மருத்துவமனையில் சேர்த்த நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News December 28, 2025

கள்ளக்குறிச்சி: துணி துவைத்த மாணவிக்கு நேர்ந்த சோகம்!

image

புதுப்பாலப்பட்டைச் சேர்ந்தவர் அப்பாதுரை மகள் முனீஸ்வரி (16). 11ம் வகுப்பு படித்து வரும் இவர், நேற்று தங்களுக்கு சொந்தமான வயலில் துணிகளை துவைத்துக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென மயங்கி விழுந்துவிட்டார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News December 28, 2025

கள்ளக்குறிச்சி:இரவு நேர ரோந்து பணி விவரம் !

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (டிச.27) இரவு முதல் நாளை (டிச.28) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!