News May 8, 2025
பஹல்காம் தாக்குதல் தான் தொடக்கப்புள்ளி: விக்ரம் மிஸ்ரி

இந்தியா – பாக்., இடையே தற்போதைய பதற்றத்துக்கு தொடக்கப்புள்ளி பஹல்காம் தாக்குதலே என்று வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார். இந்தியா பதற்றத்தை உருவாக்க முயலவில்லை என்றும், இந்தியாவின் பதிலடி பதற்றத்தை தூண்டாத வகையில், பயங்கரவாதிகள் மீது மட்டுமே நடத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டார். மேலும், பஹல்காம் தாக்குதலுக்கு டி.ஆர்.எப்., அமைப்பு 2 முறை பொறுப்பேற்றதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
Similar News
News November 4, 2025
திமுக ஆட்சியில் பெண்களுக்கு பேராபத்தான சூழல்: சீமான்

திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற பேராபத்தான சூழல் நிலவுவதாக சீமான் சாடியுள்ளார். X-ல், கோவை மாணவிக்கு நடந்த கொடூரம் தொடர்பாக பதிவிட்டுள்ள அவர், மது மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களை ஒழிக்கும் வரை இதுபோன்ற சமூகக் குற்றங்களை தடுக்க முடியாது என தெரிவித்துள்ளார். மேலும், கோவை கொடூரத்திற்கு பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்திட திமுக அரசு தவறியதே காரணம் என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
News November 4, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: தெரிந்துதெளிதல் ▶குறள் எண்: 508 ▶குறள்: தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின் தேறுக தேறும் பொருள். ▶பொருள்: எவரையும் ஆராயாமல் பதவியில் அமர்த்த வேண்டா; ஆராய்ந்த பிறகு தேர்ந்தவற்றின்மேல் சந்தேகம் கொள்ளவும் வேண்டா.
News November 4, 2025
7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பொழியும்

அதிகாலை 4 மணி வரை 7 மாவட்டங்களில் மழை பெய்யும் என IMD கணித்துள்ளது. சென்னை மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளிலும், செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிபேட்டை, திருவண்ணாமலை, கோவை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் தண்ணீர் தேங்க வாய்ப்புள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமாக பயணிக்கவும். உங்கள் ஊரில் மழை பெய்கிறதா?


