News May 8, 2025
BREAKING: தங்கம் 10 கிராம் ₹1 லட்சத்தை தாண்டியது

24 கேரட் தங்கம் விலை இன்று 1 கிராம் ₹60 அதிகரித்து, ₹9,960ஆகவும், 10 கிராம் ₹600 உயர்ந்து, ₹99,600 ஆகவும் விற்கப்படுகிறது. இதேபோல், 22 கேரட் தங்கம் விலை இன்று 1 கிராம் ₹55 அதிகரித்து, ₹9,130-க்கு விற்பனையாகிறது. 10 கிராம் ₹550 உயர்ந்து, ₹91,300-க்கு விற்கப்படுகிறது. இதனுடன் செய்கூலி, சேதாரம், மாநில, மத்திய ஜிஎஸ்டி வரிகளை சேர்த்து நகை வாங்குகையில் 10 கிராம் ₹1 லட்சத்தை தாண்டியுள்ளது.
Similar News
News September 18, 2025
வாக்கு திருட்டு இப்படிதான் நடக்கிறது: ராகுல்

வாக்காளர் குறித்த அனைத்து தகவல்களும் ஒரே இடத்தில் இருப்பதால் தான் வாக்கு திருட்டு எளிதில் நடப்பதாக ராகுல் காந்தி பேசியுள்ளார். வாக்கு திருட்டை நடத்த, சாஃப்ட்வேர்களை வைத்து ஒவ்வொரு பூத்திலிருந்தும் முதல் வாக்காளரின் தரவு நீக்கப்படுகிறதாம். பின்னர், நீக்கப்பட்ட நபரின் தகவலை வைத்தே சிம் கார்டுகளை வாங்கி மற்ற தொகுதிகளில் வாக்காளராக சேர்ந்துகொள்ளும்படி விண்ணப்பிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
News September 18, 2025
கடவுள் தொடர்பான வழக்கு: நீதிபதியின் கருத்தால் சர்ச்சை

ம.பி.யில் உள்ள ஜவாரி கோயிலில் சேதமடைந்த விஷ்ணு சிலையை மீட்க கோரி SC-ல் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதனை விசாரித்த CJI பி.ஆர்.கவாய், இவ்வழக்கு விளம்பரத்துக்காக தொடரப்பட்டது எனவும், அவ்வளவு பெரிய விஷ்ணு பக்தராக இருந்தால் சிலையை சீரமைக்க உங்கள் கடவுளிடமே கேளுங்கள் என மனுதாரரிடம் தெரிவித்துள்ளார். இவருடைய பேச்சு மத உணர்வுகளை புண்படுத்துவதாக இருப்பதாக பலரும் கண்டனம் தெரிவிக்கின்றனர்.
News September 18, 2025
₹12 ஆயிரம் போட்டால் ₹40 லட்சம் கிடைக்கும் மாஸ் திட்டம்!

போஸ்ட் ஆபீஸின் பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் (PPF) மூலம் மாதம் ₹12,500 முதலீடு செய்தால் 15 ஆண்டுகள் கழித்து ₹40.68 லட்சம் உங்களுக்கு கிடைக்கும். அதாவது, ஒவ்வொரு மாதமும் ₹12,500 முதலீடு செய்தால், 15 ஆண்டுகளில் மொத்தம் ₹22.5 லட்சம் இருக்கும். அத்துடன், அரசின் 7.1% வட்டி விகிதத்தை சேர்த்தால் ₹40.68 லட்சம் கிடைக்கும். இந்த திட்டத்தில் இணைய போஸ்ட் ஆபீஸுக்கு செல்லுங்கள். SHARE.