News May 8, 2025

70 வயது மூதாட்டி 12-ம் வகுப்பில் பாஸ்..

image

70 வயது மூதாட்டி 12-ம் வகுப்பில் 348 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார். கோவையை சேர்ந்த ராணிக்கு கணவர் மறைவுக்கு பிறகு படிப்பில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. வீட்டில் இருந்தபடியே படித்து 12-ம் வகுப்பு தேர்வு எழுதியவர் 348 மதிப்பெண் உடன் தேர்ச்சி பெற்றுள்ளார். தமிழில் 89 மதிப்பெண்களும் ஆங்கிலத்தில் 50 மதிப்பெண்களும் வரலாற்றில் 52 மதிப்பெண்களும் எடுத்துள்ளார். ராணியின் ஆர்வத்தை பாராட்டலாமே..

Similar News

News September 17, 2025

காலையில் உடல் சுறுசுறுப்பாக இந்த யோகா பண்ணுங்க!

image

ஹஸ்த பதங்குஸ்தாசனம் செய்வதால், முழங்கால் & முதுகுத்தண்டு வலிக்கு நிவாரணம் கிடைக்கும் என கூறப்படுகிறது *தரையில் கை, கால்களை நீட்டி படுக்கவும் *கால்களை ஒன்றாக வைத்து, முட்டியை மடக்காமல் மேலே தூக்கவும் *கை இரண்டையும் விரித்த நிலையில்(படத்தில் உள்ளது போல வைக்கவும்) *இந்த பயிற்சியை செய்ய தொடங்குபவர்கள் முதலில், தலைக்கு ஒரு சிறு தலகாணியும், கால்களை சுவர் மீதும் வைத்து பயிற்சி செய்யலாம். SHARE.

News September 17, 2025

தேர்தல் வேலை செய்யாவிட்டால் ஓய்வெடுங்கள்: மூர்த்தி

image

தேர்தல் பணிகள் செய்யாத நிர்வாகிகள் வகிக்கும் பதவிகளுக்கு புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என அமைச்சர் மூர்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளார். மதுரையில் நடைபெற்ற திமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய அவர், வரும் தேர்தலில் மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற பாடுபட வேண்டும் என வலியுறுத்தினார். அமைச்சரின் இந்த வெளிப்படையான பேச்சு நிர்வாகிகள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News September 17, 2025

புரட்டாசி முதல் நாளில் சொல்ல வேண்டிய மந்திரம்!

image

பெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாதத்தின் முதல் நாளான இன்று, விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்லி வழிபடலாம். அல்லது ‘ஓம் நமோ நாராயணாய நமஹ’ என்ற மந்திரத்தை 108 முறை சொல்லி வழிபடலாம். தீப, தூப ஆராதனை காட்டி, புரட்டாசி மாதத்தில் பெருமாளின் அருளுடன், மகாலட்சுமியின் அருளும் சேர்ந்து கிடைக்க வேண்டும் என வேண்டிக் கொண்டு வழிபட வேண்டும். SHARE.

error: Content is protected !!