News May 8, 2025
இந்திய ராணுவத்திற்கு சிறிய சேதம் : ராஜ்நாத் சிங்

ஆபரேஷன் சிந்தூரில் இந்திய ராணுவத்திற்கு சிறிய அளவில் சேதம் அடைந்துள்ளதாக ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் 100 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்; பொதுமக்களில் ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை என விளக்கமளித்துள்ளார். மேலும், அமிர்தசரஸ் பொற்கோயிலைத் தாக்கும் பாகிஸ்தானின் முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 4, 2025
சற்றுமுன்: ₹3,000 விலை குறைந்தது

வெள்ளி விலை இன்று(நவ.4) கிராமுக்கு ₹3 குறைந்து ₹165-க்கும், பார் வெள்ளி கிலோவுக்கு ₹3,000 குறைந்து ₹1,65,000-க்கும் விற்பனையாகிறது. கடந்த மாத இறுதியில் மளமளவென சரிந்து வந்த வெள்ளி நவம்பர் மாதம் தொடங்கியது முதலே தினமும் உயர்ந்து வந்தது. தற்போது, மீண்டும் சர்வதேச சந்தையில் வெள்ளி விலை வீழ்ச்சியடைந்து 1 அவுன்ஸ்(28g) $48.08 ஆக சரிந்துள்ளது. நம்மூர் சந்தையிலும் மீண்டும் வெள்ளி விலை சரிவைக் கண்டுள்ளது.
News November 4, 2025
இபிஎஸ்க்கு அதிர்ச்சி கொடுத்த செங்கோட்டையன்

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், ECI-யிடம் நிலுவையில் உள்ள இரட்டை இலை சின்ன விவகாரத்தில் தலையிட்டு உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் EPS தலைமை தாங்குவதாக கூறும் அதிமுகவின் பிரிவு உண்மையில் அக்கட்சி அல்ல எனக் கூறியுள்ள அவர், கட்சியின் உண்மை நிலை என்னவென்பதை நிரூபிக்க கால அவகாசமும் கோரியுள்ளார்.
News November 4, 2025
விஜய் கட்சியில் இருந்து விலகினார்

தவெகவில் இருந்து விலகிய காஞ்சிபுரம் கிழக்கு ஒன்றிய Ex தலைவர் R.ஜெகன் பாஜகவில் இணைந்துள்ளார். மேலும், அவரது ஆதரவாளர்கள் 50-க்கும் மேற்பட்டோரும் பாஜகவில் சேர்ந்தனர். கரூர் சம்பவம் நடந்து 1 மாதம் ஆன நிலையில், கட்சியில் அதிரடி மாற்றங்களை விஜய் செய்து வருகிறார். <<18184151>>மகளிரணி<<>>, இளைஞரணி என கட்சியை வலுப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், அக்கட்சியினர் பாஜகவில் இணைந்தது பேசுபொருளாகியுள்ளது.


