News May 8, 2025
பாகிஸ்தான் பங்குச்சந்தைகளில் கடும் சரிவு

இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையால் பாகிஸ்தானில் பீதி நிலவுகிறது. இது பாகிஸ்தான் பங்குச்சந்தையிலும் எதிரொலிக்கிறது. இதனால் நேற்று ஒரே நாளில் கராச்சி பங்குச்சந்தையில் 6,500க்கும் மேல் புள்ளிகள் சரிவை சந்தித்தன. இது ஏறத்தாழ 6% சரிவாகும். இந்த சரிவு இன்றும் நீடித்தது. இன்று 5,000 புள்ளிகளுக்கும் மேல் வீழ்ச்சி கண்டது. இதனால் பங்குச்சந்தையில் வர்த்தகம் சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது.
Similar News
News September 19, 2025
இந்தியா, சீனாவிடம் டிரம்பின் பாட்சா பலிக்காது: ரஷ்யா

சீனா, இந்தியாவை மிரட்டி பணிய வைக்கலாம் என டிரம்ப் நினைத்தால், அது நடக்காது என ரஷ்ய அமைச்சர் செர்ஜி லவ்ரோ தெரிவித்துள்ளார். இரு நாடுகளும் பழங்காலம் முதலே சிறந்து விளங்கிய நாகரீகங்கள் எனவும், அவர்களிடம் போய் இதை செய், அதை செய், இல்லையென்றால் வரிவிதிப்பேன் என்று சொல்வது நகைப்புக்குரியதாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். டிரம்ப் வரிவிதிப்புகளால் மிரட்டி வரும் நிலையில் அவர் இவ்வாறு சாடியுள்ளார்.
News September 19, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல். ▶அதிகாரம்: தெரிந்துசெயல்வகை. ▶குறள் எண்: 463 ▶குறள்: ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை ஊக்கார் அறிவுடை யார். ▶பொருள்: பெரும் ஆதாயம் கிட்டுமென்று எதிர்பார்த்துக் கை முதலையும் இழந்து விடக்கூடிய காரியத்தை அறிவுடையவர்கள் செய்யமாட்டார்கள்.
News September 19, 2025
சீனாவிற்கு செக் வைக்க அது எங்களுக்கு வேண்டும்: டிரம்ப்

ஆஃப்கனில் உள்ள பக்ரம் விமானப்படை தளத்தை மீண்டும் கைப்பற்ற முயற்சித்து வருவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். அது தற்போது சீனாவின் கட்டுப்பாட்டில் சென்றுவிட்டதால், மீண்டும் அமெரிக்க கட்டுப்பாட்டில் கொண்டுவருவது அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார். சீனாவின் அணு ஆயுத உற்பத்தி மையத்திற்கு அருகில் அமைந்துள்ள அந்த விமானப்படை தளத்தை, ஆஃப்கனில் தாலிபன் ஆட்சியை கைப்பற்றியதும் அமெரிக்கா விட்டுச் சென்றது.