News May 8, 2025
மயிலாடுதுறை: சீர்காழி மாணவி முதலிடம்

பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி உள்ள தனியார் பள்ளி மாணவி ஜெஸ்மியா 597 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். அதே பள்ளியில் பயிலும் மாணவி மதுஷா 596 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளார். சாதனை புரிந்துள்ள மாணவிகளுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
Similar News
News September 13, 2025
மயிலாடுதுறை: கிரைண்டர் வாங்க போறீங்களா? அப்போ கவனிங்க!

மயிலாடுதுறை மக்களே கிரைண்டர் வாங்க போறீங்களா? தமிழக அரசு கொடுக்கும் 5,000 மானியத்தை புடிங்க. தமிழக அரசு வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்கள், ஆதரவற்றோர், கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் உங்கள் வயது 25க்கு மேல் இருந்தால் தாராளமாக APPLY பண்ணலாம். தஞ்சை மாவட்ட சமூக நல அலுவரிடம் உங்கள் ஆவணங்களை சமர்பித்து விண்ணப்பிக்க மறந்துடாதீங்க. மற்றவர்களுக்கும் SHARE செய்து APPLY பண்ண சொல்லுங்க!
News September 13, 2025
பழங்குடியினர் மக்களுக்கான முகாமில் 23 மனுக்கள்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழங்குடியினருக்கான சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பழங்குடியின மக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை அளித்தனர்.குடிநீர் சாலை மின்விளக்குகள் வேண்டி 4 மனுக்களும் அரசு வீடு வேண்டி 1மனு என மொத்தம் 23 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவிட்டார்.
News September 13, 2025
மயிலாடுதுறை: செயற்குழு கூட்டதில் கலந்துகொண்ட அமைச்சர்

மயிலாடுதுறை தனியார் அரங்கில் மயிலாடுதுறை மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் நிவேதா எம்.முருகன் தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் குத்தாலம் பி.கல்யாணம் சீர்காழி எம்.எல்.ஏ பன்னீர்செல்வம் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.