News May 8, 2025
ராமநாதபுரம் மாவட்டத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (மே.08) வெப்ப சலனம் காரணமாக மாவட்டத்தின் உள் பகுதிகளில் பிற்பகல் மற்றும் மாலை நேரத்தில் ஒரு சில இடங்களில் குறிப்பாக பரமக்குடி, முதுகுளத்தூர், கமுதி, பார்த்திபனூர், அபிராமம், நயினார் கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என ராமநாதபுரம் காலநிலை அமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 29, 2025
ராமநாதபுரத்தில் ட்ரோன்கள் பறக்க தடை

இந்திய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் இராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை தருவதை முன்னிட்டு பாதுகாப்பு காரணம் கருதி இராமநாதபுரம் மாவட்ட எல்லைப் பகுதிகளில் நாளை (30.10.2025) ட்ரோன்கள் பறக்க தடைவிதிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
News October 29, 2025
இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை இரவு ரோந்து பணி

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (அக். 28) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், அவசர உதவிக்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.
News October 28, 2025
ராம்நாடு: டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (அக். 28) முதல் அக். 30 மூன்று நாட்கள் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழாவை முன்னிட்டு அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் விதமாகவும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் விதமாகவும் மாவட்ட முழுவதும் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்படும் என இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் அறிவித்துள்ளார்.


