News May 8, 2025

நாமக்கல்: 70 பள்ளிகள் 100% தேர்ச்சி

image

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் நாமக்கல் மாவட்டத்தில் 195 பள்ளிகள் உள்ளது. அதில் 12 அரசு பள்ளிகள் உட்பட 70 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளது. இதில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளில் 9343 பேரில் 8672 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு முடிவுகளை WAY2NEWSல் தொடர்ந்து பாருங்கள். (ஷேர் பண்ணுங்க)

Similar News

News December 15, 2025

நாமக்கல்: நான்கு சக்கர ரோந்து அதிகாரிகள் விவரம்!

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று (டிச.15) நாமக்கல் – (பாலசந்தர் – 9498169138), வேலூர் – (தேசிங்கராஜன் – 9442260691), ராசிபுரம் – (கோவிந்தசாமி – 9498169110), குமாரபாளையம் – (தனபால் – 9498115000) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.

News December 15, 2025

நாமக்கல் முட்டை விலை நிலவரம்!

image

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ.6.25- காசுகளாக விற்பனை ஆகி வருகின்றது. இந்த நிலையில், இன்று நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், முட்டை விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. எனவே முட்டை கொள்முதல் விலை ரூ.6.25-ஆக நீடிக்கின்றது. முட்டையின் தேவை அதிகரித்துள்ளதால், முட்டை விலை வரலாறு காணாத உச்சத்தில் நீடிக்கின்றது.

News December 15, 2025

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்!

image

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், இன்று டிசம்பர்-15ஆம் தேதி பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் இருந்து பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்களை வழங்கினர். இதனையடுத்து மாற்றுத்திறனாளிடமிருந்து ஆட்சியர் துர்காமூர்த்தி கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பெற்றுக் கொண்டார். தொடர்ந்து தேர்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

error: Content is protected !!