News May 7, 2025
செங்கல்பட்டு இரவு நேரத்தில் ரோந்து பணி காவல் ஆய்வாளர்களின் விவரம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் இருந்து இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபடும் உதவி காவல் ஆய்வாளர்களின் இன்றைய (மே.1) பெயர் பட்டியல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. ஆபத்து நேரங்களில் மேலே கொடுக்கப்பட்டுள்ள எண்களை பொதுமக்கள் அழைக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. *இரவு தொழிற்சாலைகளுக்கு வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பகிரவும்*
Similar News
News November 5, 2025
மாமல்லபுரம்: ‘விஜய்தான் முதல்வர் வேட்பாளர்’

மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி தனியார் நட்சத்திர விடுதியில் இன்று த.வெ.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், ‘த.வெ.க. முதல்வர் விஜய்’ என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், கூட்டணி குறித்து முடிவெடுக்க விஜய்க்கு முழு அதிகாரம் வழங்கியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ADMK- TVK கூட்டணி அமையும் என எதிர்பார்க்கப்ட்ட நிலையில், த.வெ.க.-வின் இந்த முடிவு முக்கியமானதாக கருதப்படுகிறது.
News November 5, 2025
வன்மத்தை கக்கிய முதல்வர் – விஜய்

முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் நமக்கு எதிராக வன்மத்தை கக்கி உள்ளதாக தவெக தலைவர் விஜய் குற்றஞ்சாட்டி உள்ளார். மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரியில் நடைபெற்ற த.வெ.க பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அவர், ‘ எங்களை அரசியல் செய்ய வேண்டாம், அரசியல் பேச வேண்டாம் என்று கூறிவிட்டு, வேதனையில் அமைதி காத்த போது எங்களுக்கு எதிராக அரசியல் செய்தார்கள்’ என விஜய் தவெக பொதுக்குழு கூட்டத்தில் பேசி உள்ளார்.
News November 5, 2025
FLASH: மாமல்லபுரம்: ’முதல்வர் பேசியது வடிகட்டிய பொய்’

த.வெ.க பொதுக்குழு கூட்டம் மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி தனியார் நட்சத்திர விடுதியில் இன்று நடைபெறுகிறது. இதில் பேசிய த.வெ.க. தலைவர் விஜய், அவசர அவசரமாக தனிநபர் ஆணையம் அமைக்கப்பட்டது ஏன் எனவும், முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் பேசியது வடிகட்டிய பொய் எனவும் குறிப்பிட்டார். மேலும் பேசிய அவர், ‘த.வெ.க-வுக்கு 100% வெற்றி கிடைக்கும்’ என தெரிவித்தார். ஷேர் பண்ணிட்டு உங்கள் கருத்தை பதிவு பண்ணுங்க?


