News May 7, 2025
சென்னை இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்

சென்னை போலீசாரின் “Knights on Night Rounds” இன்று (01.05.2025) இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கட்டாயம் உதவும். பகிரவும்
Similar News
News January 13, 2026
சென்னை: ரவுடி கொலை… 4 போலீசார் அதிரடி சஸ்பெண்ட்

சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனை வளாகத்தில் உறங்கிக் கொண்டிருந்த ரவுடி ஆதியை மர்மநபர்கள் வெட்டி கொலை செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை சம்பவத்தின் போது பணியில் இருந்த மூன்று பெண் காவலர்கள் மற்றும் ஒரு ஆண்காவலர் என மொத்தம் நான்கு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
News January 13, 2026
சென்னை மாநகராட்சி – தொழில் உரிமம் புதுப்பிப்பு அறிவிப்பு

சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையில், ‘சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் வர்த்தகம் செய்ய வணிகர்கள் பரிந்துரைக்கப்பட்ட கட்டணத்தை செலுத்தி தொழில் உரிமம் பெற உரிமக்காலம் முடிவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னரே புதுப்பிக்க வேண்டும். தொழில் உரிமம் புதுப்பிக்க, நிலுவையின்றி தொழில் வரி செலுத்தப்பட்டிருக்க வேண்டும் எனவும் ஏற்கனவே பெறப்பட்ட உரிமத்தின் நகல் மற்றும் கட்டணம் அவசியம் என தெரிவித்துள்ளது.
News January 13, 2026
சென்னை: முற்றிலும் இலவசம்… செம வாய்ப்பு

தமிழக அரசு சார்பில் ஏழை, விதவை, கணவன்&சமூகத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் செயல்படுகிறது. இதன்படி, தையல் எந்திரம் & துணை சாதனங்கள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும். இதற்கு அருகில் உள்ள பொதுசேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம்.மேலும் தகவலுக்கு மாவட்ட சமூகநல அலுவலரை (044-25264568) தொடர்பு கொள்ளுங்கள்.*செம திட்டம். நண்பர்களுக்கு பகிரவும்*


