News May 7, 2025
படுக்கையறையில் இருக்கக் கூடாத 10 பொருள்கள்

படுக்கை அறையில் நாம் வைக்கும் சில பொருள்கள் வாஸ்துப்படி தீமைகளை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது. அவை: *டீ, காபி கப், சாப்பிட்ட தட்டுகள் உள்ளிட்ட கழுவப்படாத பாத்திரங்கள் *தலையணைக்கு கீழே பேப்பர், புத்தகம், தங்க நகைகள் *படுக்கையில் எலக்ட்ரானிக் கேட்ஜெட்கள், செல்லப்பிராணி. இவை தூக்கத்தை பாதிப்பதுடன், நெகடிவ் எனர்ஜியை அதிகரிக்கும் என நம்பப்படுகிறது. அதேபோல படுக்கைக்கு நேராக கண்ணாடி இருக்கக் கூடாது.
Similar News
News October 14, 2025
Recipe: காஜு கத்லி செய்யலாம் வாங்க!

*முந்திரி பருப்பை 6 மணிநேரம் நீரில் ஊறவைத்து, நைஸாக அரைக்கவும் *வாணலியில் நெய்விட்டு, முந்திரி மாவை கொட்டி நன்கு கிளறவும் (நிறம் மாறக்கூடாது) *அதில், குங்குமப்பூ, ஏலக்காய் பொடி, சர்க்கரை பாகு சேர்க்கவும் *சப்பாத்தி மாவு பதத்திற்கு இந்த கலவை வந்ததும், அடுப்பில் இருந்து இறக்கிவிடவும் *ஆறியவுடன் டைமண்ட் வடிவில் அதை துண்டுகளாக வெட்டினால் சுவையான காஜு கத்லி ரெடி. SHARE IT.
News October 14, 2025
கரூர் விவகாரத்தை கையில் எடுக்கும் எதிர்க்கட்சிகள்

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் இன்று தொடங்கிய நிலையில், 17-ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இக்கூட்டத்தில் கிட்னி திருட்டு, கரூர் துயரம், குழந்தைகளின் உயிரை பறித்த இருமல் மருந்து, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை அதிகரிப்பு, கொலை குற்றங்கள் அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கையில் எடுக்க திட்டமிட்டுள்ளன. இதற்கு பதிலடி கொடுக்க ஆளும் திமுகவும் தயாராகி வருகிறது
News October 14, 2025
BREAKING: தங்கம் விலை தாறுமாறாக மாறியது

சென்னையில் தங்கம் விலை இன்று(அக்.14) தாறுமாறாக மாறியுள்ளது. 22 கேரட் தங்கம் ஒரே நாளில் கிராமுக்கு ₹245 உயர்ந்து ₹11,825-க்கும், சவரன் ₹94,600-க்கும் விற்பனையாகிறது. இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ₹1,960 அதிகரித்துள்ளதால் நகைப்பிரியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 14 நாள்களில் மட்டும் தங்கம் சவரனுக்கு ₹7,720 அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.