News May 7, 2025
வைபவ் சூர்யவன்ஷி கொடுத்த அதிர்ச்சி.. ரசிகர்கள் ஷாக்

கடந்த போட்டியில் 35 பந்துகளில் சதம் அடித்து அசத்திய வைபவ் சூர்யவன்ஷி மும்பைக்கு எதிரான போட்டியில் சொதப்பினார். தீபக் சாகர் வீசிய 4-வது பந்தில் கேட்ச் கொடுத்து வைபவ் டக் அவுட்டானர். கடந்த போட்டியில் 200 ரன்களுக்கு அதிகமான டார்கெட்டை 15 ஓவர்களில் ராஜஸ்தான் சேஸ் செய்ததால் இந்த போட்டியிலும் அசத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தொடக்கம் அதற்கு மாறாக அமைந்துள்ளது.
Similar News
News December 7, 2025
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் வேலை!

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 19 பணிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழறிவு முதல் இன்ஜினியரிங் தகுதி வரை உள்ள 18–45 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் அதிகபட்சம் ரூ.1.16 லட்சம் வழங்கப்படும். விண்ணப்பப் படிவத்திற்கு <
News December 7, 2025
உக்ரைன் மீது தாக்குதலை தீவிரப்படுத்திய ரஷ்யா!

USA குழுவுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் காணப்பட்டதாக ஜெலென்ஸ்கி கூறிய சில மணிநேரங்களில், உக்ரைன் மீது ரஷ்யா தீவிர தாக்குதலை நடத்தியுள்ளது. 653 ஆளில்லா விமானங்கள், 51 ஏவுகணைகள் மூலம் 700-க்கும் மேற்பட்ட தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதனால் மின்நிலையங்கள், எரிசக்தி கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. அணுமின் நிலையத்தின் மின்சாரம் துண்டிப்பு, உலை பாதுகாப்பிற்கான கவலையை எழுப்பியுள்ளது.
News December 7, 2025
ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு.. வந்தது HAPPY NEWS

ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு வழங்குவதற்கான அறிவிப்பை இம்மாத இறுதியில் அரசு வெளியிடும் என தகவல் வெளியாகியுள்ளது. வேட்டி, சேலை மற்றும் பச்சரிசி உள்ளிட்ட பொங்கல் தொகுப்பு ஆகியவற்றை டோக்கன் அடிப்படையில் வழங்க அரசு பரிசீலித்து வருகிறது. அதுமட்டுமின்றி, பரிசுத் தொகையாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ₹5,000 வரை வழங்குவது தொடர்பாகவும் ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.


