News May 7, 2025
சிம்மத்தில் நுழையும் கேது: ஏற்றம் காணும் 3 ராசிகள்

கேது கிரகம், வரும் மே 18-ம் தேதி சிம்ம ராசிக்குள் நுழைவதால் முன்னேற்றம் காணப் போகும் 3 ராசிக்காரர்கள்: *ரிஷபம்: தடைபட்ட பணிகள் முடிவுக்கு வரும். வருமானம் அதிகரிக்கும். நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டு *விருச்சிகம்: சாதகமான சூழல் ஏற்படும். வேலை, தொழிலில் முன்னேற்றம். திருமண வரன் தேடி வரும் *தனுசு: பிரச்னைகள் தீரும். தொழில் வளர்ச்சி, நல்ல லாபம் ஏற்படும். பணி உயர்வு, ஊதிய உயர்வுக்கு வாய்ப்புள்ளது.
Similar News
News January 18, 2026
விக்ரம் சாராபாய் பொன்மொழிகள்

*முன்னேற விரும்பினால், புதிய பாதைகளைத் தேடத் தயங்கக்கூடாது. *இளைஞர்களின் கனவுகள் தான் ஒரு நாட்டின் எதிர்காலத்தை உருவாக்குகின்றன. *இரைச்சலுக்கு மத்தியில் இசையை கேட்கத் தெரிந்தவனால் மகத்தான சாதனைகளை நிகழ்த்த முடியும். *விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் வளர்ந்து வரும் நாடுகளின் முன்னேற்றத்திற்கு அத்தியாவசியமானவை. *ஒரு நாட்டின் வளர்ச்சி அதன் அறிவியல் மனப்பாங்கில் தான் அடிப்படையாக உள்ளது.
News January 18, 2026
சவுதி அரேபியாவில் அரிய சிறுத்தை மம்மிகள்

வடக்கு சவுதி அரேபியாவில் உள்ள குகைகளில் அரிய சிறுத்தை எச்சங்களை (மம்மிகள்) கண்டுபிடித்துள்ளனர். அவை 130 – 1800 ஆண்டுகள் பழமையானவை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அரார் நகருக்கு அருகே 7 சிறுத்தை மம்மிகள் கண்டுபிடிக்கப்பட்டன, அவற்றுடன் 54 சிறுத்தை எலும்புகளும் இருந்தன. பாலைவனங்கள், பனிப்பாறைகள் மற்றும் சதுப்பு நிலங்களில் மம்மிகேஷன் இயற்கையாகவே நிகழ்கிறது என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
News January 18, 2026
RCB ஆல்-ரவுண்டர் U19 WC-ல் அசத்தல்

U19 WC-ல் வங்கதேசத்துக்கு எதிராக இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு வழிவகுத்த விஹான் மல்ஹோத்ராவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. இளம் ஆல்-ரவுண்டரான விஹான், IPL 2026 ஏலத்தில் RCB அணியால் ₹30 லட்சத்திற்கு வாங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


