News May 7, 2025
வாரத்திற்கு 2 முறை சிக்கன் சாப்பிட்டால் ஆபத்து..

100 Gm-க்கு குறைவாக சிக்கன் சாப்பிடுபவர்களுடன் ஒப்பிடும்போது, வாரத்திற்கு (2 முறை) 300 Gm-க்கு மேல் சாப்பிடுபவர்களுக்கு 27% இறப்பு விகிதம் அதிகம் என சமீபத்தில் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அதிக சிக்கன் சாப்பிடுபவர்கள் (பெண்களை விட ஆண்களுக்கு) இரைப்பை குடல் புற்றுநோய்களை உருவாக்கும் அபாயம் 2 மடங்கு உள்ளதாம். பதப்படுத்தப்பட்ட சிக்கன் சாப்பிட்டால், இந்த ஆபத்து இரு மடங்காக அதிகரிக்குமாம்.
Similar News
News August 13, 2025
ஆக.. தனிப்பட்ட காரணம் என்று சொல்லக்கூடாது: இபிஎஸ்

அரசுக் கல்லூரிக்குள் வெடிகுண்டு வருவதற்கும் வழக்கம் போல ‘ஆக.. தனிப்பட்ட காரணம்’, Justification அளிக்க இந்த அரசு முயற்சிக்க நினைத்தால், அதற்கு இப்போதே வெட்கித் தலை குனிந்து கொள்ளட்டும் என இபிஎஸ் விமர்சித்துள்ளார். தூத்துக்குடி பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் பையில் வெடிகுண்டு வெடித்ததைச் சுட்டிக்காட்டிய அவர், இதற்கு தக்க சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.
News August 13, 2025
சஞ்சுவுக்கு பதில் ஜடேஜாவைக் கேட்கும் RR

IPL 2026 சீசனில் சஞ்சு சாம்சனை வாங்க CSK மும்முரம் காட்டி வருகிறது. இந்நிலையில், சஞ்சுவை கொடுப்பதாக இருந்தால் ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் துபே ஆகியோரில் ஒருவரை RR நிர்வாகம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை அணியின் தளபதியாக விளங்கும் ஜடேஜாவை கேட்டுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இருப்பினும், ஜடேஜாவை CSK விட்டுக்கொடுக்காது என்ற நம்பிக்கையும் ரசிகர்களுக்கு உள்ளதாம்.
News August 13, 2025
டிசைனிங் ‘ஜாம்பவான்’ குமார் காலமானார்!

1000 படங்களுக்கு மேல் பணியாற்றிய போஸ்டர் & டிசைனிங் ‘ஜாம்பவான்’ குமார்(67) உடல்நலக் குறைவால் காலமானார். 1983-ல் வெளியான ‘சலங்கை ஒலி’ படத்தில் தொடங்கி ‘சபாஷ் நாயுடு’ வரை தொடர்ச்சியாக கமலுடன் குமார் பணிபுரிந்துள்ளார். தேவர் மகன், விருமாண்டி, தளபதி, படையப்பா, கில்லி, வல்லவன் என பல Iconic பட போஸ்டர்கள் இவரின் கைவண்ணம்தான். இவரது மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். #RIP