News May 7, 2025
தடைகள் வராமல் இருக்க இங்க போங்க

பாற்கடலை கடையும்போது தடங்கல் ஏற்பட விநாயகரை வணங்காததால் தடங்கல் ஏற்பட்டதாக எண்ணிய தேவர்கள், பாற்கடலில் ஏற்பட்ட நுரையால் விநாயகரை செய்து அதனை வழிபட்டு அமிர்தம் பெற்றனர். நுரையால் செய்யப்பட்ட வெள்ளை விநாயகரை கும்பகோணம் அருகே உள்ள திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் கோயிலில் வைத்து வழிபட்டனர். இவரை வழிபட்டால் நினைத்தது நடக்கும் எடுத்த காரியத்தில் நிச்சயமாக வெற்றி கிடைக்கும் என்பது நம்பிக்கை ஆகும்.
Similar News
News December 4, 2025
மயிலாடுதுறை: அனைத்து கட்சி பாக முகவர்கள் கூட்டம்

சீர்காழியில் அனைத்து கட்சி பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம் சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ் தலைமையில் நேற்று நடைபெற்றது. தாசில்தார் அருள் ஜோதி முன்னிலை வகிக்க தேர்தல் தனி பிரிவு தாசில்தார் இளவரசு வரவேற்றார். கோட்டாட்சியர் சுரேஷ் புதிய படிவத்தை அனைத்து கட்சி பாக முகவர்களுக்கும் வழங்கி பேசினார். இதில் திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
News December 4, 2025
மயிலாடுதுறை: SBI வங்கியில் வேலை.. தேர்வு கிடையாது!

மயிலாடுதுறை மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 20 – 35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள், வரும் டிச.23-க்குள் இங்கு <
News December 4, 2025
மயிலாடுதுறை ஆட்சியர் அறிவிப்பு!

TNUSRB நடத்தும் காவல் சார்பு ஆய்வாளர் (சப் இன்ஸ்பெக்டர்) பணியிடங்களுக்கான எழுத்து தேர்வுக்கு தயாராகும் விண்ணப்பதாரர்களுக்காக மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தில் இலவச மாதிரி தேர்வு நடத்தப்பட உள்ளது. தேர்வில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் தேவையான ஆவணங்களுடன் வேலை வாய்ப்பு மையத்தை நேரில் அணுகி பதிவு செய்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்


