News May 7, 2025
தஞ்சாவூர்: எடுத்த காரியத்தில் வெற்றியடையவில்லையா

பாற்கடலை கடையும்போது தடங்கல் ஏற்பட விநாயகரை வணங்காததால் தடங்கல் ஏற்பட்டதாக எண்ணிய தேவர்கள், பாற்கடலில் ஏற்பட்ட நுரையால் விநாயகரை செய்து அதனை வழிபட்டு அமிர்தம் பெற்றனர். நுரையால் செய்யப்பட்ட வெள்ளை விநாயகரை கும்பகோணம் அருகே உள்ள திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் கோயிலில் வைத்து வழிபட்டனர். இவரை வழிபட்டால் நினைத்தது நடக்கும் எடுத்த காரியத்தில் நிச்சயமாக வெற்றி கிடைக்கும் என்பது நம்பிக்கை ஆகும். Share It
Similar News
News July 9, 2025
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூட்டம்

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தலைமையில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பள்ளிப் படிப்பினை முடித்த மாணவ-மாணவியர்கள் உயர் கல்வி பயில்வதற்கான இரண்டாம் கட்ட வழிகாட்டல் சிறப்பு குறைதீர் கூட்டத்தினை இன்று துவக்கி வைத்தார்.
News July 9, 2025
தஞ்சை: விமான நிலையத்தில் ரூ.30,000 சம்பளத்தில் வேலை!

இளைஞர்களே விமான நிலையத்தில் வேலை பார்க்க ஆசை இருக்கா? AAI கார்கோ லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தில் காலியாகவுள்ள 393 Assistant (Security), Security Screener (Fresher) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 21 வயது அதிகபட்சம் 27 வயதுக்குள் இருப்பவர்கள் இங்கே <
News July 9, 2025
குறுவை சாகுபடிக்காக 23,784 டன் உரம் கையிருப்பு

தஞ்சை மாவட்டத்தில் தற்போது வரை 95,000 ஏக்கரில் குறுவை சாகுபடி பணிகள் நடைபெற்று முடிவடைந்துள்ளன. இந்த நிலையில் தஞ்சை மாவட்டத்தில் நடப்பு குறுவை பருவத்திற்கு தேவையான உரங்களான யூரியா 9,996 டன், டிஏபி 2,685 டன், பொட்டாஷ் 3,468 டன், காம்ப்ளக்ஸ் 6,094 டன், சூப்பர் பாஸ்பேட் 1,541 டன் என 23,784 டன் உரங்கள் இருப்புள்ளது மேலும் தஞ்சை மாவட்டத்திற்கு குறுவை சாகுபடிக்காக 1,227 டன் யூரியா உரம் வந்துள்ளது.