News May 7, 2025
IPL: ராஜஸ்தான் பௌலிங்

மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் பௌலிங் தேர்வு செய்தது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலில் மும்பை அணி முதல் இடத்துக்கு சென்றுவிடும். அதேநேரம் அடுத்த சுற்று வாய்ப்பை 99% இழந்த ராஜஸ்தான் அணி 4-வது வெற்றிக்கு நிச்சயம் போராடும். இரு அணிகளும் இதுவரை நேருக்கு நேர் சந்தித்துக்கொண்ட போது 15 முறை மும்பையும், 14 முறை ராஜஸ்தானும் வெற்றி பெற்றுள்ளன.
Similar News
News March 19, 2026
அதிமுக கூட்டணியில் மேலும் ஒரு கட்சி இணைந்தது

அதிமுக கூட்டணி ஏறக்குறைய இறுதியாகிவிட்ட நிலையில், கடைசிநேரத்தில் புதிதாக ஒரு கட்சி இணைந்துள்ளது. மாவீரன் கட்டபொம்மன் பேரவையின் தலைவர் PV ராதாகிருஷ்ணன் தலைமையில் அக்கட்சியின் நிர்வாகிகள் EPS-ஐ சந்தித்தனர். இதையடுத்து, வரும் தேர்தலில் அதிமுகவிற்கு முழு ஆதரவை அளிப்பதாக PV ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார். கூட்டணியில் இணைந்த அவருக்கு, EPS நன்றி தெரிவித்துக் கொண்டார்.
News March 19, 2026
ரஜினி ரசிகரை களமிறக்குகிறாரா விஜய்?

ரஜினி குறித்த ஆதவ்வின் பேச்சு சர்ச்சையானதை அடுத்து, TVK நிற்கும் தொகுதிகளில் ரஜினி ரசிகர்கள் களமிறங்குவார்கள் என ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி அறிவித்தார். இந்நிலையில், சென்னை துறைமுகம் தொகுதியில் ரஜினி ரசிகர் மன்ற மாவட்ட தலைவர் அசோக் என்பவரை களமிறக்க விஜய் முடிவு செய்துள்ளாராம். TVK மீது ரஜினி ரசிகர்கள் கோபத்தில் உள்ள நிலையில், ரஜினி ரசிகரையே விஜய் வேட்பாளராக நிறுத்த திட்டமிடுவது கவனம் பெற்றுள்ளது.
News March 19, 2026
காலம் வேறு… காட்சி வேறு!

இன்று டெல்லி சென்றுள்ள EPS, தன்னை சந்திக்க அமித்ஷா இன்னும் <<19425630>>நேரம் ஒதுக்கவில்லை<<>> என்றார். காலச்சக்கரத்தில் 1998-ஐ ரீவைண்ட் செய்யுங்கள். ஜெயலலிதாவின் ஆதரவு கடிதத்துக்காக வாஜ்பாய் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பல மணிநேரம் காத்துக் கிடந்தனர். இதனால் பதவியேற்பும் தாமதமானது. வாஜ்பாய் தூதராக அதிமுகவின் ஆதரவை கேட்டு போயஸ் கார்டன் வந்த ஜார்ஜ் பெர்னாண்டஸை நீண்டநேரம் காக்கவைத்தே சந்தித்தார் ஜெயலலிதா. வரலாறு!


