News May 7, 2025
ஒரே போட்டோவில் இத்தனை சூப்பர் ஸ்டார்கள்

மும்பையில் இன்று Waves Summit-ஐ பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மாநாட்டில் திரைப்பிரபலங்கள், தொழில்துறைத் தலைவர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இதில் மோகன்லால், ரஜினி, ஹேமமாலினி, சிரஞ்சீவி, அக்சய்குமார், மிதுன் சக்ரவர்த்தி ஆகியோர் ஒன்றாக இணைந்து எடுத்துக்கொண்ட போட்டோக்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.
Similar News
News March 22, 2026
இந்த வார்த்தையை இப்போதும் கேட்பதுண்டா?

வெளியூர்களில் ஒருவர் நம்மை பார்க்கும்போதும், வரன் தேடும்போதும் ‘பூர்விகம்’ எது என்று முன்னர் கேட்பதுண்டு. ஆனால், தற்போதோ சொந்த ஊர் எது என கேட்கின்றனர். பூர்விகம் என்பது உங்களின் முன்னோர்கள் வாழ்ந்த ஊர், சொந்த ஊர் என்பது நீங்கள் பிறந்த ஊர். தற்போது பலரும் பணி காரணமாக வெளியூரில் சென்று செட்டில் ஆகிவிடுகின்றனர். இதனால் பூர்விகம் என்ற சொல் கொஞ்சம் கொஞ்சமாக மறைகிறது என கூறுகின்றனர். உங்கள் கருத்து?
News March 22, 2026
அனைத்து ரேஷன் கார்டுக்கும்.. அரசு மகிழ்ச்சி அறிவிப்பு

நாடு முழுவதும் ஏப்ரலில் 3 மாதங்களுக்கான ரேஷன் பொருள்கள் ஒரே தவணையாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மே, ஜூன் மாதங்களுக்கான பொருள்களை அடுத்த மாதமே பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோடைக்காலத்தில் மக்கள் சிரமப்படுவதை தவிர்க்கவும், உணவு பற்றாக்குறை ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யவும் மத்திய அரசு இந்நடவடிக்கை எடுத்துள்ளதாம். SHARE IT
News March 22, 2026
கரூர் ஃபார்முலாவில் திமுக? செந்தில் பாலாஜி

கரூரில் வாக்காளர்களை அடைத்துவைக்க <<19438297>>மனிதப்பட்டிகளை<<>> திமுக தயார் செய்வதாக அதிமுக Ex அமைச்சர் MR விஜயபாஸ்கர் புகாரளித்திருந்தார். இந்நிலையில், ஒவ்வொரு வார்டுக்குமான பூத் கமிட்டி அலுவலகங்கள் தான் அவை என்றும், அதற்குரிய அனுமதியை முறையாக திமுக பெற்றுள்ளதாகவும் செந்தில் பாலாஜி விளக்கமளித்துள்ளார். ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை மட்டுமே அதிமுகவினர் ஆளும்கட்சி மீது வைப்பதாகவும் அவர் சாடியுள்ளார்.


