News May 7, 2025
BJP ப்ளானை முறியடித்ததால் சாதிவாரி கணக்கெடுப்பு

கடந்த மக்களவை தேர்தலில் பாஜக 400 இடங்களில் வென்றிருந்தால் இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு அரசியலமைப்பும் மாற்றி அமைக்கப்பட்டிருக்கும் என்று தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார். 400 இடங்களை வெல்ல வேண்டும் என்ற பாஜகவின் திட்டத்தை எதிர்க்கட்சிகள் முறியடித்துவிட்டன. இல்லையென்றால், தற்போது சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஒப்புக்கொண்டிருக்க மாட்டார்கள் எனத் விமர்சித்துள்ளார்.
Similar News
News December 8, 2025
நீதி வென்றதாக நடிகர் திலீப் கண்ணீர்

பிரபல நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதி வென்றுள்ளதாக <<18502283>>வழக்கில் இருந்து விடுதலை<<>> செய்யப்பட்ட நடிகர் திலீப் உணர்ச்சி பொங்க கூறியுள்ளார். எர்ணாகுளத்தில் பேசிய அவர், பொய்யான வழக்கால் சினிமாவில் தனது புகழ், நற்பெயரை சீர்குலைக்க நினைத்தவர்களின் எண்ணம் பொய்யாகிவிட்டது என்றார். மேலும், இந்த வழக்கிற்காக கடந்த 9 ஆண்டுகளாக தனக்கு துணை நின்ற சினிமா, சட்ட நிபுணர்களுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.
News December 8, 2025
பள்ளி மாணவி மயங்கி விழுந்து மரணம்

தென்காசி, உடையாம்புளி பகுதியில் பள்ளிக்கு புறப்பட்ட 9-ம் வகுப்பு மாணவி பாலகிருஷ்ணவேணி (13) மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவருக்கு பிறக்கும்போது இதயத்தில் பிரச்னை இருந்துள்ளது. அதற்கு தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்திருக்கிறார். இந்நிலையில், இன்று காலை அம்மாவிடம் சொல்லிவிட்டு ஆசை ஆசையாக கிளம்பிய அவர், அப்படியே மயங்கி கீழே விழுந்த உடன் உயிரிழந்துள்ளார்.
News December 8, 2025
அமைச்சர் மீது CM நடவடிக்கை எடுக்கணும்: அண்ணாமலை

அமைச்சர் நேரு மேலும் ₹1020 கோடி மோசடி செய்திருப்பதாக <<18501393>>ED கூறியிருப்பது<<>> அதிர்ச்சியளிக்கிறது என அண்ணாமலை தெரிவித்துள்ளார். திமுகவில் பல ஊழல்கள் நடந்திருப்பது ஆதாரங்களோடு அம்பலமாகியிருப்பதாக கூறிய அவர், இந்த ஆட்சியில் கலெக்ஷன், கமிஷன், கரப்ஷன் துறைகளே சிறப்பாக செயல்பட்டிருப்பதாக விமர்சித்துள்ளார். மேலும், மினிஸ்டர் மீது CM உடனடியாக FIR பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.


