News May 7, 2025
இறந்து அழுகிய நிலையில் கணவன் – மனைவி உடல்கள் மீட்பு

காட்டு பரமக்குடி மேலத்தெரு பகுதியில் உள்ள வீட்டில், இன்று இறந்து அழுகிய நிலையில் நாகசுப்பிரமணியன்(75) மற்றும் அவரது மனைவி தனலட்சுமி(70) ஆகியோரது உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்களா? இல்லை கொலை நடந்துள்ளதா? என்பது குறித்து ராமநாதபுரம் தடவியல் துறை போலீசார் உதவியுடன், பரமக்குடி நகர் காவல் நிலைய போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Similar News
News August 20, 2025
ராம்நாடு: கூட்டு பட்டாவை தனி பட்டாவாக மாற்றனுமா

உங்களது இடம் (அ) வீடு கூட்டு பட்டாவில் இருந்து மாற்ற <
✅கூட்டு பட்டா,
✅விற்பனை சான்றிதழ்,
✅நில வரைபடம்,
✅சொத்து வரி ரசீது,
✅மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். SHARE பண்ணுங்க!
News August 20, 2025
வாதவனேரி, வெங்கலக்குறிச்சியில் புதிய CCTV கேமராக்கள்

மாவட்ட காவல்துறையின் SAFE RAMNAD திட்டத்தின் கீழ், சத்திரக்குடி காவல் நிலையம், கீழத்தூவல் பகுதியில் உள்ள வாதவனேரி, வெங்கலக்குறிச்சி கிராமங்களில் புதிதாக 10 CCTV கேமராக்கள் (வாதவனேரி-6, வெங்கலக்குறிச்சி-4) நிறுவப்பட்டன. 2025ஆம் ஆண்டில் மொத்தம் 2,942 கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன. இதற்கான ஒத்துழைப்புக்கு பொதுமக்கள், நிர்வாகிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ், IPS நன்றி தெரித்தார்.
News August 20, 2025
பாம்பன் மீனவர்களுக்கு ரூ.3.50 கோடி ரூபாய் அபராதம்

பாம்பன் பகுதியை சேர்ந்த 9 நாட்டுப்படகு மீனவர்களின் வழக்கு நேற்று புத்தளம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, தலா ஒரு மீனவருக்கு 3 கோடியே 50 லட்சத்தி 20 ஆயிரம் ரூபாய் (இலங்கை பணம்) அபராத தொகையாக செலுத்த வேண்டும் எனவும், அபராத தொகையை செலுத்த தவறும் பட்சத்தில் 3 மாத காலம் மீனவர்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பளித்தார்.