News May 7, 2025
தி.மலை மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தி.மலை மாவட்டம் பொறுத்தவரை இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்டை மாவட்டங்களான திருப்பத்தூர், வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரியில் பலத்த காற்றுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது. உங்க ஏரியால வானிலை எப்படி இருக்கு? கமெண்ட்ல சொல்லுங்க.
Similar News
News December 13, 2025
தி.மலை: பட்டா, சிட்டா விவரங்களை பார்ப்பது எப்படி?

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லுங்கள். பட்டா, சிட்டா நில அளவைப் பதிவேடு ஆப்ஷனை க்<
News December 13, 2025
தி.மலையில் இன்று ரேஷன் குறை தீர்வு முகாம்

தி.மலை மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட சேவைகள் குறித்த மக்கள் குறைதீர் முகாம் இன்று (டிசம்பர்-13) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை குடிமை பொருள் வட்டாட்சியர் மற்றும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் நடைபெறும். இந்த முகாமில் புதிய குடும்ப அட்டை புதுப்பித்தல் பெயர் சேர்த்தல் நீக்கம் திருத்தம் முகவரி மாற்றம் நகல் அட்டை சேவை தொடர்பான மனுக்களை பொதுமக்கள் வழங்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
News December 13, 2025
தி.மலை: ஆடு, கோழி பண்ணை அமைக்க விருப்பமா?

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர்<


