News May 7, 2025
புதுச்சேரியில் நாளை புதுபேருந்து நிலையம் திறப்பு

புதுச்சேரி நகராட்சி பேருந்து நிலையத்தை புதுச்சேரி பொலிவுறு நகர திட்டம் (Smart City)-த்தின் மூலம் சுமார் 29.50 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த பொலிவுறு பேருந்து முனையமாக மேம்படுத்த 28.06.2023 அன்று மாண்புமிகு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தது. தற்போது அந்த பணிகள் முடிவடைந்து நிலையில் நாளை (மே.02) திறப்பு விழா செய்ய ஏற்பாடு நடைபெற உள்ளது.
Similar News
News March 22, 2026
என்.டி.ஏ கூட்டணிக்கு யாதவர் பாதுகாப்பு பேரவை ஆதரவு

புதுச்சேரியில் உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு, அகில இந்திய யாதவர் பாதுகாப்பு பேரவை தனது முழு ஆதரவைத் தெரிவிப்பதாக, அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. என்.ஆர். காங்கிரஸ், பாஜக, அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து சந்திக்கும் இந்தத் தேர்தலில், யாதவர் பேரவையின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் கூட்டணிக்கு ஆதரவாகச் செயல்படுவார்கள் என்று புதுச்சேரி மாநிலத் தலைவர் குமார் அறிவித்துள்ளார்.
News March 22, 2026
புதுச்சேரி: அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

புதுச்சேரி மாநில சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் பட்டியலை, பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று வெளியிட்டார். உப்பளம் (15) தொகுதியில் அன்பழகன் (முன்னாள் எம்எல்ஏ, மாநில கழகச் செயலாளர் மற்றும் உருளையன்பேட்டை (16) தொகுதியில் காந்தி முன்னாள் துணைச் செயலாளர் போட்டியிடுகின்றனர்.
News March 22, 2026
புதுச்சேரி: எம்எல்ஏ பாஜகவில் இருந்து விலகல்

புதுச்சேரி, உசுடு சட்டமன்றத் தொகுதியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் சாய் சரவணகுமார், பாரதிய ஜனதா கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகியுள்ளார். வருகிற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தராததால், இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். தனது அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கைகள் குறித்து விரைவில் அறிவிப்பதாகவும் கூறியுள்ளார்.


