News May 7, 2025
பிரதமர் ஒரு போராளி: ரஜினி புகழாரம்

மும்பையில் WAVES உச்சிமாநாட்டில் பேசிய நடிகர் ரஜினி, ‘எந்த சவாலையும் சமாளிக்கும் வல்லமை படைத்தவர் பிரதமர் மோடி’ என்று புகழாரம் சூடியுள்ளார். பிரதமர் ஒரு போராளி, அவரின் திறமையை ஒரு தசாப்தமாக நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம் எனக் கூறிய ரஜினி, பஹல்காம் தாக்குதலுக்கு பிரதமர் தக்க பதிலடி கொடுப்பார். காஷ்மீரில் மீண்டும் அமைதியை நிலைநாட்டுவார் என்றும் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 13, 2026
உழவர்களின் கண்ணீர் CM-க்கு மகிழ்ச்சியா? அன்புமணி

திமுக ஆட்சியில் உழவர்களின் நெஞ்சத்தில் மகிழ்ச்சி பொங்குவதாக CM ஸ்டாலினே கூறினால், அதை விடக் கொடுமையான கேலிக்கூத்து இருக்க முடியாது என அன்புமணி விமர்சித்துள்ளார். உழவர்களுக்கு தினமும் ₹30க்கும் குறைவாக மட்டுமே வருவாய் கிடைக்கிறது, ₹289.63 கோடி இழப்பீடு அவர்களின் கணக்கில் வரவு வைக்கப்பட்டதா? உழவர்களின் கண்ணீர் CM-க்கு மகிழ்ச்சியாக தெரிகிறதா? என அடுக்கடுக்கான கேள்விகள் எழுப்பி கடுமையாக சாடியுள்ளார்
News January 13, 2026
மனச்சோர்வை குறைக்க உதவும் உணவுகள்!

மனச்சோர்வு என்பது நாள்பட்ட மன அழுத்தம், தூக்கமின்மை ஆகியவற்றால் ஏற்படுவது. இதனால், சிந்தனையில் தெளிவு இல்லாமல் குழப்பமாக உணர்தல், மறதி, நினைவாற்றல் கோளாறு, கவனக் குறைவு ஆகியவை ஏற்படும். இதனை சரிசெய்ய சில உணவு வகைகள் நமக்கு உதவுகின்றன. அவை என்னென்ன உணவுகள் என்று மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.
News January 13, 2026
முன்னாள் எம்பி காலமானார்

கேரள காங்., (M) மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் எம்பியுமான தாமஸ் குதிரவட்டம் (80) உடல்நலக்குறைவால் காலமானார். பிரிக்கப்படாத கேரள காங்கிரஸின் செயல் தலைவராகவும், நீண்டகால பொதுச் செயலாளராகவும் பணியாற்றியவர். மறைந்த K.M.மணியின் நெருங்கிய நண்பராக இருந்த இவர், அக்கட்சி வளர்ச்சிக்கு மிக முக்கிய பங்காற்றியுள்ளார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


