News May 7, 2025
மகளிர் உரிமைத்தொகை.. அமைச்சரின் சூப்பர் அப்டேட்!

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை விரிவாக்கம் செய்வதற்கான பணி ஜூன் 4-ம் தேதி முதல் தொடங்க உள்ளது. இதில், ஏற்கனவே விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். நிர்ணயிக்கப்பட்ட தகுதி அடிப்படையில் ₹1,000 வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார். இதற்காக, TN முழுவதும் 9,000 இடங்களில் முகாம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
Similar News
News August 20, 2025
பாஜக அணியில் பாமக, தேமுதிக.. திடீர் திருப்பம்

துணை ஜனாதிபதி தேர்தலுக்கான NDA வேட்பாளர் CP ராதாகிருஷ்ணனுக்கு ராமதாஸ், பிரேமலதா ஆதரவு தெரிவித்துள்ளது அரசியல் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. CP ராதாகிருஷ்ணன் நல்ல தேர்வு என ராமதாஸ் கூறியுள்ள நிலையில், தமிழர் ஒருவர் துணை ஜனாதிபதியாக வர அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என பிரேமலதா கூறியுள்ளார். 2026 தேர்தலில் அவர்கள் NDA அணியில் இணைவதற்கான அச்சாரம் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
News August 20, 2025
1999-ல் மதவாதம் தெரியாதா? கனிமொழிக்கு EPS கேள்வி

பாஜகவுடன் கூட்டணி வைத்து CP ராதாகிருஷ்ணனை திமுக MP-யாக வெற்றி பெற செய்தபோது மதவாதம் குறித்து தெரியாதா என கனிமொழிக்கு EPS கேள்வி எழுப்பியுள்ளார். குடும்பத்தின் நலனுக்காக கொள்கைகளை அடிக்கடி மாற்றும் கட்சி திமுக என சாடிய அவர், RSS காரர் என்பதால் ஆதரிக்க மாட்டோம் என்பது நாடகம் என்றார். மேலும், தற்போதைய ஆட்சியில், அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருள்களின் விலை உயர்ந்துள்ளது என்றார். உங்கள் கருத்து?
News August 20, 2025
Windows OS யூஸ் பண்றீங்களா? உடனே இதை செய்யுங்கள்!

எளிதாக ஹேக் செய்யப்பட வாய்ப்பு உள்ளதால் மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் 10, விண்டோஸ் 11 பயன்படுத்துபவர்கள் எச்சரிக்கையாக இருக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. Microsoft Office, Microsoft Dynamics, Browser, Device, Developer Tools, Open Source Software ஆகியவை ஆபத்து பட்டியலில் உள்ளன. இச்செயலிகளை உடனே அப்டேட் செய்யவும், விண்டோஸை அப்டேட் செய்து சிஸ்டமை ரீபூட் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.