News May 7, 2025

₹37,966 வரை சம்பளம்… RRB-யில் 9970 காலிப்பணியிடங்கள்

image

RRB-யில் இருக்கும் 9970 உதவி லோகோ பைலட் பணிகளுக்கு தற்போது விண்ணப்பிக்கலாம். 10 வது தேர்ச்சி பெற்று, 18 – 30 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். உடல்தகுதி மற்றும் கணினி வழி தேர்வு நடைபெறும். குறைந்தபட்ச சம்பளமாக, இதர சலுகைகளுடன் 19,900 – ₹37,966 வரை வழங்கப்படும். இதற்கு வரும் மே 11-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். முழு தகவலுக்கு <>இந்த லிங்கை கிளிக் செய்யவும்<<>>.

Similar News

News November 1, 2025

தினம் 2 முட்டை சாப்பிட்டால்…

image

*உணவுகளில் அதிக ஊட்டச்சத்துகள் நிறைந்தது முட்டை தான். வைட்டமின்கள் B5, B2, B12, B6, K, E, மற்றும் D, கால்சியம், துத்தநாகம், செலினியம், ஃபோலேட், பாஸ்பரஸ் உள்ளிட்ட முக்கிய நுண்சத்துகள் உள்ளன. *முட்டை நல்ல கொழுப்பை அதிகரிக்க உதவுகிறது. *புரதமும், பிற சத்துகளும் நிறைந்திருந்தாலும் குறைவான கலோரி கொண்டது. *உடனடி ஆற்றலை கொடுக்கும். இதிலுள்ள லூட்டின், வைட்டமின் A சத்துகள் பார்வை திறனை அதிகரிக்கும்.

News November 1, 2025

LSG ஹெட் கோச் ஆகிறாரா யுவராஜ் சிங்?

image

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங், IPL 2026 சீசனில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு DC, GT ஆகிய அணிகளுடனும் யுவராஜ் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. பஞ்சாப் கிங்ஸ், புனே வாரியர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி டேர்டெவில்ஸ் அணிகளில் பிளேயராகவும் யுவராஜ் விளையாடியுள்ளார்.

News November 1, 2025

பிளாஸ்டிக் பாட்டில்களை தவிருங்கள்: சித்தராமையா

image

பிளாஸ்டிக் பாட்டில்களை அரசு அலுவலகங்கள் & நிகழ்ச்சிகளில் தவிர்ப்பதை உறுதி செய்யுமாறு கர்நாடக CM சித்தராமையா உத்தரவிட்டுள்ளார். இதற்கு பதிலாக சுற்றுச்சூழலை காக்கும் பொருள்களை பயன்படுத்துமாறும் அறிவுறுத்தியுள்ளார். ‘Nandini Products’ என்ற உள்மாநில உற்பத்தி பொருள்களை பயன்படுத்துமாறும் கேட்டுக் கொண்டுள்ளார். தமிழகத்திலும் மீண்டும் மஞ்சள் பை, அரசு அலுவலகங்களில் ஆவின் பாலகம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!