News May 7, 2025

பாமகவை நெருங்கும் NDA.. கூட்டணி பேச்சு தீவிரம்!

image

பாமகவை NDA கூட்டணிக்குள் கொண்டுவர பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ளது. அண்மையில், டெல்லியில் பாமகவினர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசியபோது கூட கூட்டணி குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. அன்புமணியின் ராஜ்யசபா MP பதவி அடுத்த மாதத்துடன் நிறைவடைகிறது. இதனால், விரைவில் கூட்டணி பேச்சுவார்த்தையை நிறைவு செய்து மீண்டும் அவருக்கு MP பதவியை வழங்கவிருப்பதாக சொல்லப்படுகிறது.

Similar News

News October 17, 2025

பனையூரை விட்டு நகர்வாரா விஜய்?

image

கரூர் துயரம் நடந்து இன்றுடன் 21 நாள்கள் நிறைவடைந்துவிட்டன. இந்நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்த பிறகே அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கையை மேற்கொள்வோம் என்ற நினைப்பில் விஜய் உள்ளாராம். ஆனால், பனையூரை விட்டே அவர் நகராமல் இருப்பது அரசியல் களத்தில் பின்னடைவை ஏற்படுத்தும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். தொடர் ஆலோசனைகளில் மட்டுமே விஜய் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது. உங்கள் கருத்து என்ன?

News October 17, 2025

IND vs AUS: கேமரூன் கிரீன் விலகல்

image

இந்தியாவுக்கு எதிரான ODI தொடரில் இருந்து ஆஸி., ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் விலகியுள்ளார். அவருக்கு பதிலாக மார்னஸ் லபுஷேன் அணியில் இணைந்துள்ளார். ஆஸி.,ல் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி, 3 ODI, 5 T20 போட்டிகளில் விளையாடுகிறது. ODI, சுப்மன் கில் தலைமையிலும், T20 போட்டியை சூர்யகுமார் யாதவ் கேப்டன்சியிலும் இந்தியா விளையாடுகிறது. ரோஹித், கோலி உள்ளிட்ட வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

News October 17, 2025

திமுகவின் கையை விட்டு போகிறது.. ஸ்டாலின் அதிருப்தி

image

மதுரை மாநகராட்சியின் அடுத்த மேயர் யார் என்பதை முடிவு செய்வதில் உள்கட்சி பூசல் காரணமாக CM ஸ்டாலின் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. மேயர் இந்திராணி ராஜினாமா செய்த நிலையில், தற்போது வரை புதிய மேயர் தேர்வாகவில்லை. இதனால், துணை மேயராக உள்ள நாகராஜன்(CPM) இன்று முதல் பொறுப்பு மேயராகவுள்ளார். ஏற்கெனவே மாநகராட்சி நிர்வாகம், திமுகவினருக்கு நாகராஜன் கடும் நெருக்கடியை கொடுத்து வந்தது கவனிக்கத்தக்கது.

error: Content is protected !!