News May 7, 2025

நாகப்பட்டினம்: 10th பாஸ் போதும்.. அரசு வேலை ரெடி

image

மத்திய அரசின் ஜிஎஸ்டி & சுங்க வரித்துறையில் காலியாக உள்ள Seaman, Greaser, Tradesman போன்ற 14 குரூப்-சி காலிபணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஊதியமாக ரூ.18000 முதல் ரூ.56900 வரை வழங்கப்படும். 10 th, ஐ.டி.ஐ முடித்த 18 – 25 வயதுக்குட்பட்ட நபர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு www.cbic.gov.in என்ற இணையத்தை பார்க்கவும். வேலை தேடும் நபர்களுக்கு இதை SHARE செய்யவும்!

Similar News

News July 7, 2025

கார் மோதியதில் கணவன் மனைவி மகள் பலி

image

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த நீர்முளை பிரதான சாலையில் கார் மோதி இரு சக்கர வாகனத்தில் வந்த கணவன் மனைவி மகள் ஆகிய மூன்று பேர் உயிரிழந்தனர். நாகப்பட்டினத்திலிருந்து திருத்துறைப்பூண்டிக்கு இரு சக்கர வாகனத்தில் மருதம்பட்டினத்தை சேர்ந்த அருள்பிரகாஷ் தனது மனைவி பெரியநாயகி 7 வயது மகள் ஆகிய மூன்று பேர் உயிரிழப்பு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News July 7, 2025

கோடியக்கரை சரணாலயத்தின் சிறப்பம்சங்கள்!

image

நாகை மாவட்டம் கோடியக்கரை பகுதியில் வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ளது. இந்த பசுமை மாறாக்காட்டில் புள்ளிமான், வெளிமான், நரி, பன்றி, மயில் உள்ளிட்ட விலங்குகள் சுதந்திரமாக சுற்றி திரிகின்றன. இந்த காட்டில் 154 மூலிகை உள்ளிட்ட 271 வகையான தாவர வகைகள் உள்ளன. ராமாயணத்தில் இங்கு நின்று ராமர் இலங்கையை பார்த்த இடம், ராமர் பாத நினைவிடமாக தொல்பொருள் ஆராய்ச்சித்துறையால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஷேர் பண்ணுங்க!

News July 7, 2025

நாகையில் ஹவுஸ் வயரிங் இலவச பயிற்சி

image

நாகை புதிய கடற்கரை சாலை பகுதியில் உள்ள மத்திய அரசின் ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பில் இலவசமாக ஹவுஸ் வயரிங் பயிற்சி அளிக்கப்படுகிறது. 30 நாட்கள் நடைபெறும் பயிற்சியில் நாகை மாவட்ட கிராமபுறத்தில் வசிக்கும் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 45 வயதுக்குட்பட்டவர் பங்கேற்கலாம். இப்பயிற்சியில் சேர 6374005365 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மைய இயக்குநர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!