News May 7, 2025
திருச்சி: 10th பாஸ் போதும்.. அரசு வேலை ரெடி

மத்திய அரசின் ஜிஎஸ்டி & சுங்க வரித்துறையில் காலியாக உள்ள Seaman, Greaser, Tradesman போன்ற 14 குரூப்-சி காலிபணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஊதியமாக ரூ.18000 முதல் ரூ.56900 வரை வழங்கப்படும். 10 th, ஐ.டி.ஐ முடித்த 18 – 25 வயதுக்குட்பட்ட நபர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு www.cbic.gov.in என்ற இணையத்தை பார்க்கவும். வேலை தேடும் நபர்களுக்கு இதை SHARE செய்யவும்!
Similar News
News December 31, 2025
திருச்சியில் அதிர்ச்சி: மாணவர் விடுதியில் போதை கும்பல் கைது

திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கம் அருகில் உள்ள ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில், மாணவர்கள் என்ற போர்வையில் தங்கி இருந்து போதை மாத்திரை விற்பனை செய்த 4பேரை, தனிப்படை போலீசார் கைது செய்ததுடன் அவர்களிடமிருந்து 180 போதை மாத்திரைகள் மற்றும் 3 கத்திகளையும் பறிமுதல் செய்த சம்பவம் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
News December 31, 2025
திருச்சி: பெண்களுக்கு ரூ.3 லட்சம்… APPLY NOW!

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற<
News December 31, 2025
திருச்சி: ரயில்கள் புறப்படும் நேரம் மாற்றம்

திருச்சியில் இருந்து புறப்படும் ரயில்களின் நேரம் நாளை (ஜன.1) முதல் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி திருச்சி – திருவனந்தபுரம் அதிவிரைவு ரயில் காலை 7:20 க்கு பதிலாக 7:15 க்கும், திருச்சி – திண்டுக்கல் டெமு ரயில் மாலை 6:10க்கு பதிலாக மாலை 6:05 க்கும், திருச்சி – திருவாரூர் பயணிகள் ரயில் இரவு 8:25 க்கு பதிலாக 8:20 க்கும் புறப்படும் என திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.


