News May 7, 2025

பஸ் இருசக்கர வாகனம் மோதல் வாலிபர் உயிரிழப்பு

image

மேல்சோமார்பேட்டையை சோ்ந்தவர் சஞ்சய் (17). இவா் மோட்டாா் சைக்கிளில் கிருஷ்ணகிரி – ஒசூா் தேசிய நெடுஞ்சாலையின் அணுகு சாலையில் சென்றார். அப்போது பின்னால் வந்த அரசுப் பேருந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த சஞ்சயை அருகில் இருந்தவா்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பினா். ஆனால் வழியிலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News August 19, 2025

கிருஷ்ணகிரி: B.E படித்தவர்களுக்கு ஏர்போர்ட் வேலை!

image

இந்திய விமான நிலைய ஆணையத்தில் பல்வேறு பிரிவுகளில் உள்ள 976 ஜூனியர் நிர்வாகி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. கட்டக்கலை, சிவில், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், தகவல் தொழில்நுட்பம் ஆகிய பிரிவுகளில் பி.இ, பி.டெக், எம்.சி.ஏ மற்றும் கேட் தேர்வில் வெற்றி பெற்ற பட்டதாரிகள் நியமிக்கப்பட உள்ளனர். ரூ.40,000 – ரூ.1,40,000 வரை சம்பளம். செப்.27ம் தேதி கடைசிநாள் <>மேலும் அறிய<<>>. ஷேர் பண்ணுங்க.

News August 19, 2025

எச்சரிக்கை ! கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை அறிவிப்பு!

image

அறிமுகம் இல்லாதவர்களிடமிருந்து வரும் வீடியோ அழைப்புகளை ஏற்கும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருங்கள். உங்கள் வீடியோ பேசல்கள் பதிவு செய்யப்பட்டு, பின்னர் உங்களை மிரட்ட & சமூக வலைத்தளங்களில் தவறான முறையில் பயன்படுத்தப்பட வாய்ப்பு உள்ளது. இவ்வாறான ஏமாற்று முறைகளில் சிக்காமல் முன் எச்சரிக்கையுடன் இருங்கள். இது போன்று நடந்தால் <>இந்த இணையதளத்திலோ<<>> (அ) 1930 என்ற எண்ணிலோ புகார் அளிக்கலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News August 19, 2025

கிருஷ்ணகிரியில் இன்று உங்களுடன் ஸ்டாலின்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (ஆக.19) ஓசூர் மாநகராட்சியில் செயிண்ட் ஜோசப் பள்ளி, ராமகிருஷ்ண பரமஹம்சா பள்ளி மற்றும் சானசந்திரம் மாநகராட்சி துவக்கப்பள்ளி, மாத்தூர் வட்டாரத்தில் எஸ்.வி.மஹால், கிருஷ்ணகிரி வட்டாரத்தில் ஜாகிர் வெங்கடாபுரம் அரசு பள்ளி, காவேரிப்பட்டினம் வட்டாரத்தில் நெடுங்கல் அரசு மேல்நிலை பள்ளி ஆகிய இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது. SHARE பண்ணுங்க.

error: Content is protected !!