News May 7, 2025
புடவையில் தீப்பிடித்து பெண் உயிரிழப்பு

காம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த அஞ்சலை. நேற்று முன்தினம் இயற்கை உபாதை கழிப்பதற்காக தனது வீட்டின் அருகே சென்ற போது அங்கு யாரோ குப்பை கொளுத்திய நெருப்பு புகைத்து கொண்டிருப்பதை கவனிக்காமல் அருகில் சென்றுள்ளார். அப்போது திடீரென புடவையில் தீப்பிடித்து உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டு மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சிக்கு அழைத்து வரப்பட்ட நிலையில் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Similar News
News August 11, 2025
கள்ளக்குறிச்சியில் இங்கு போனால் குழந்தைபேறு நிச்சயம்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகத்தில் அமைந்துள்ள கூத்தாண்டவர் கோயிலின் சிறப்புகள் தெரியுமா? இங்கு முக்கிய தெய்வமாக விளங்குபவர் அரவான். சித்திரை மாத பௌர்ணமி அன்று திருநங்கைகள் அரவானை மணப்பது வழக்கம். திருமணத்திற்கு அடுத்தநாள் அரவாண் உயிர் கொடுக்கும் நாளாக கருதப்படுகிறது. அன்று அளிக்கப்படும் உறுமை சோறை உண்டால் குழந்தைபேறு கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!!
News August 11, 2025
கள்ளக்குறிச்சியில் நடந்த இந்த அதிசயத்த பாருங்க!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்துள்ள சேந்தமங்கலத்தில் மனித முக அமைப்புடன் ஒரு ஆட்டுக்குட்டி பிறந்த அதிசயம் நடந்துள்ளது. ஆனந்தன் என்பவருக்கு சொந்தமான ஆடு ஈன்ற 2 குட்டிகளின் ஒரு குட்டி மனித முக அமைப்புடன் இறந்த நிலையில் பிறந்துள்ளது. இந்த அதிசயத்தை சுற்றுவட்டார பகுதி மக்கள் கண்டு வியந்தனர். இன்னும் இது பற்றி தெரியாத உங்கள் நண்பர்களுக்கு இதை ஷேர் பண்ணி தெரியப்படுத்துங்க.!
News August 11, 2025
யார் கடன் பெறலாம்?

இதற்கு விவசாய தொழில் முனைவோர், விவசாய குழுக்கள், சுய உதவிக்குழுக்கள், கூட்டுப்பொறுப்பு குழுக்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், புது நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம். மின்னணு வணிக மையம், சேமிப்பு கிடங்கு, குளிர்பாதன கிடங்கு, சிப்பம் கட்டும் கூடம், தரம் பிரிக்கும் இயந்திரம், மெழுகு பூசும் மைய உட்கட்டமைப்புக்கு கடன் பெறலாம்.