News May 7, 2025
ஃபாலோவர்ஸ் குறைந்ததால் தற்கொலை செய்த பிரபலம்!

சோஷியல் மீடியா பிரபலம்<<16231412>> மிஷா அகர்வால்<<>>, தனக்கு இன்ஸ்டா ஃபாலோவர்ஸ் குறைந்ததால் தான் தற்கொலை செய்து கொண்டதாக அவரின் சகோதரி, பதிவிட்டு அதிரவைத்துள்ளார். அப்பதிவில், ‘மிஷாவின் போன் wallpaper எல்லாவற்றையும் சொல்கிறது. இன்ஸ்டா உண்மை உலகம் அல்ல, ஃபாலோவர்ஸ் உண்மையான உறவுகள் அல்ல.. தயவுசெய்து இதைப் புரிந்து கொள்ள முயற்சிக்கவும்’ என கேட்டுக்கொண்டுள்ளார். ஃபாலோவர்ஸ் குறைந்ததால் தற்கொலையா?
Similar News
News January 2, 2026
பிரியாணியுடன் புத்தாண்டு கொண்டாடிய இந்தியர்கள்!

புத்தாண்டுக்கு முந்தைய நாள் (டிச.31) மாலை முதல் இரவு வரை அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளை Swiggy பகிர்ந்துள்ளது. அதில் வழக்கம் போல், 2.19 லட்சம் ஆர்டர்களுடன் பிரியாணி முதலிடத்திலும், 90,000 ஆர்டர்களுடன் பர்கர் 2-ம் இடத்திலும் உள்ளது. ஆச்சரியமாக இந்த பட்டியலில் உப்புமாவும் (4,244 ஆர்டர்கள்) இடம்பிடித்துள்ளது. டீ இல்லாமல் கொண்டாட்டமா எனும் வகையில், 26,618 கப் டீக்களும் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன.
News January 2, 2026
‘ரஜினி 173’ இயக்குநர் யார்? நாளை விடைதரும் RKFI

கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் ‘ரஜினி 173’ படம் உருவாக உள்ளது. இந்த படத்தில் இருந்து சுந்தர் சி விலகிய பின், படம் குறித்த எந்த அப்டேட்டையும் படக்குழு வெளியிடவில்லை. இதனிடையே படத்தை யார் இயக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்தது. இந்நிலையில் நாளை காலை 11 மணிக்கு ரஜினி 173 குறித்த அறிவிப்பு வெளியாகும் என ராஜ்கமல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
News January 2, 2026
92 வயதில் 37 வயது பெண்ணை அம்மா ஆக்கினார்❤️❤️

92 வயதில் அப்பாவாகி உலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் ஆஸி., டாக்டர் ஜான் லெவின். இவரின் மகன், தன் 65-வது வயதில் நோய் பாதித்து உயிரிழந்தார். இந்நிலையில் தங்களுக்கு ஒரு வாரிசு இல்லாமல் போய்விடுமோ என்ற கவலையில் ஆழ்ந்த லெவினும், அவரது 2-வது மனைவியான 37 வயது யான் யிங்கும் குழந்தை பெற முடிவெடுத்தனர். அதன்பின், IVF முறையில் முயற்சிக்க முதல் அட்டம்டிலேயே ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளனர்.


