News May 7, 2025

புதிய சாலைக்கு ஆட்சேபனை : 30 நாட்களுக்குள் மனு அளிக்க அழைப்பு

image

மதுரை விரகனூர் முதல் சக்குடி வரை சுமார் 8.4 கிலோ மீட்டருக்கு வைகை ஆற்றின் கரையில் சாலை அமைக்க திட்டமிடப்பட்டு அதற்கான நிலம் எடுக்கும் பணி துவங்கி உள்ளது,நிலம் எடுப்பு குறித்து ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் மே 30ஆம் தேதிக்குள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள நெடுஞ்சாலை துறையின் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் நிலம் எடுப்பு அலுவலகம் அலுவலகத்தை அணுகி கடிதம் மூலம் தெரிவிக்கலாம் என அறிவிப்பு

Similar News

News December 7, 2025

மதுரை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

மதுரை மாவட்டத்தில் இன்று (07.12.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News December 7, 2025

மதுரை: இழந்த பணத்தை திருப்பி பெறுவது இனி சுலபம்.!

image

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில், உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். மேலும், அருகில் உள்ள வங்கியையும் அணுகலாம். SHARE பண்ணுங்க!

News December 7, 2025

மேலூரில் மதுக் கடத்திய போலீஸ்காரர் கைது

image

மதுரை மாவட்டம் மேலூரில் சிறப்பு புலனாய்வு இன்ஸ்பெக்டர் மணிக்குமார், எஸ்.ஐ., சின்னமந்தையன், ஏட்டு பாஸ்கரன் தலைமையிலான போலீசார் இன்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது டூவீலரில் மது பாட்டில்கள் கடத்தியதாக புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் போலீஸ்காரர் பாண்டி குமார் என்பவரை கைது செய்து மேலூர் போலீஸ் ஸ்டேஷனில் வைத்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!