News May 7, 2025

கொடைக்கானல் செல்லும் தவெக தலைவர் விஜய்!

image

இரண்டு நாள் பயணமாக தவெக தலைவர் விஜய் கொடைக்கானல் செல்கிறார், மேலும் மே 1 நாளை காலை பணி விமான மூலம் மதுரை செல்லும் விஜய், அப்படியே கொடைக்கானலுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது,மேலும் விஜய் தனிப்பட்ட முறையில் கொடைக்கானல் செல்வதால், மாவட்ட செயலாளர்கள் அரசியல் ரீதியாக வரவேற்க வேண்டாம் என தமிழக வெற்றி கழக தலைமையகம் உத்தரவிட்டுள்ளது,

Similar News

News December 24, 2025

வேடச்சந்தூர் அருகே விபத்து

image

கல்வார்பட்டி ஊராட்சி ரங்கநாதபுரம் விவசாயி சுப்பிரமணி (70). திண்டுக்கல்-கரூர் நெடுஞ்சாலை பகுதியில் உள்ள எத்திலாம்பட்டி சென்று விட்டு வீட்டுக்கு செல்வதற்காக பைக்கில் சென்றார். கரூர்-திண்டுக்கல் ரோடு தனியார் ஓட்டல் முன்பு சாலையை கடக்கும் போது பின்னால் வந்த கார் மோதி சுப்பிரமணி இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News December 24, 2025

திண்டுக்கல்: ஈஸியா பட்டா பெறுவது எப்படி ?

image

திண்டுக்கல் மக்களே புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியுமா? ஆம், eservices.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று, அதில் ‘Apply Patta transfer’ என்று ஆப்ஷன் மூலமாக வீட்டிலிருந்த படியே புதிய பட்டாவிற்கு விண்ணப்பிக்கலம். (SHARE பண்ணுங்க)

News December 24, 2025

ஒட்டன்சத்திரத்தில் வசமாக சிக்கிய பெண்! அதிரடி கைது

image

திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம் அருகே நரிப்பட்டியில் உடல்நலம் பாதிக்கப்பட்ட முருகேசன் என்பவரிடம், அரசு அதிகாரி என்று கூறி பல்லடத்தைச் சேர்ந்த பிரியா என்ற பெண் அறிமுகமானார். பின் அரசின் உதவித்தொகை பெற்றுத் தருவதாகக் கூறி, ஆதார் கார்டு எடுப்பது போல நடித்து பீரோவில் இருந்த 6 பவுன் நகையை திருடிச் சென்றார். புகாரின் பேரில் பிரியாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!