News May 7, 2025
விவசாயி வெட்டி படுகொலை காவல்துறை விசாரணை

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள பெரியசாமிபுரத்தைச் சேர்ந்தவர் சிங்கராஜ் மகன் ஆபிரகாம். விவசாயியான இவர் இரவு வீட்டில் இருந்த போது மர்மநபர்கள் அவரை அரிவாளால் வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. சம்பவ இடத்திலே அவர் பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்த சின்ன கோவிலாங்குளம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முறையற்ற உறவால் கொலை நடந்ததாக தகவல்.
Similar News
News November 8, 2025
தொழில் தொடங்க ஆர்வம் உள்ள நபர்கள் விண்ணப்பிக்க அழைப்பு

தென்காசி மாவட்டத்தில் வேளாண் விளைபொருட்கள் மதிப்புக்கூட்டும் மையங்களை தொடங்க ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள், பெண்கள், பழங்குடியினர், ஆதிதிராவிடர், பொதுப்பிரிவினர் அனைவரும் தொழில் தொடங்க வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலம் விண்ணப்பிக்கலாம். மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தகவல்.
News November 8, 2025
தென்காசி மாவட்ட காவல் உதவி எண்கள்

தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலகம் சார்பில், இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில் தென்காசி மாவட்ட பகுதிகளில் போலீசாரின் அவசர உதவிகள் தேவைப்படும் போது, பொதுமக்கள் தங்கள் பகுதியை சேர்ந்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு உரிய உதவிகளை பெற்று கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.
News November 7, 2025
தென்காசி மாவட்ட இரவு ரோந்து பணி காவலர்கள்

தென்காசி மாவட்டம் (தென்காசி, ஆலங்குளம், புளியங்குடி,சங்கரன்கோவில் பொதுமக்களுக்கு இரவு நேரங்களில் காவல் துறை உதவி தேவைப்பட்டால் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.இன்று (7-11-25) தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விபரம்.அவசர உதவி தேவைப்படுபவர்கள் மாவட்ட கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் -9884042100


