News May 7, 2025
பிரதமர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல், வாலிபர் கைது

டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இது தொடர்பாக மத்திய உளவுப் பிரிவு மூலம் நாகை மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைதொடர்ந்து, மிரட்டல் விடுத்த ராமநாயக்கன் குளம் தெருவை சேர்ந்த கணேஷ்குமார்(33) என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். விசாரணையில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது.
Similar News
News August 20, 2025
என்ன சான்றுகளை பெறலாம்? (பாகம் – 2)

வருமான சான்று, சாதி சான்று, இருப்பிடச் சான்று,கணவனால் கைவிடப்பட்டோர் சான்று, முதல் பட்டதாரி சான்று, விவசாய வருமான சான்றிதழ், வாரிசு சான்றிதழ், குடிபெயர்வு சான்றிதழ், சிறு/குறு விவசாயி சான்றிதழ், ஆண் குழந்தை என்பதற்கான சான்றிதழ், கலப்பு திருமண சான்றிதழ், சொத்து மதிப்பு சான்றிதழ், விதவை சான்றிதழ் & வேலையில்லாதோர் சான்றிதழை நீங்கள் இதன் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!
News August 20, 2025
நாகை: சான்றிதழ் தொலைந்து விட்டதா? Don’t Worry!

நாகை மக்களே! சாதி சான்றிதழ், பிறப்பு/இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் தொலைந்து விட்டால் இனிமே தாசில்தார் அலுவலகத்துக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் வீட்டில் இருந்தபடியே உங்கள் மொபைல் போனிலே ஈஸியா டவுன்லோடு செய்துக்கொள்ளலாம். இந்த <
News August 20, 2025
நாகை: ரூ.1 லட்சம் மதிப்பில் மதுபாட்டில் பறிமுதல்

நாகை மாவட்டம் நாகூர்-திருமருகல் சாலையில் நேற்று நாகூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே காரைக்கால் திருபட்டினத்தை சேர்ந்த சோமசுந்தரம் மற்றும் மணிகண்டன் ஆகியோர் காரில் ரூ.1 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் கடத்தி செல்வது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், மதுபாட்டில்கள் மற்றும் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.