News May 7, 2025
பிரதமர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல், வாலிபர் கைது

டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இது தொடர்பாக மத்திய உளவுப் பிரிவு மூலம் நாகை மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைதொடர்ந்து, மிரட்டல் விடுத்த ராமநாயக்கன் குளம் தெருவை சேர்ந்த கணேஷ்குமார்(33) என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். விசாரணையில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது.
Similar News
News October 30, 2025
நாகை: மக்களிடமிருந்து 17 மனுக்களை பெற்ற எஸ்பி

நாகை மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் தலைமை தாங்கி, பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். பின்னர் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 17 மனுக்களை பெற்று, பெறப்பட்ட மனுக்களுக்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
News October 29, 2025
நாகை எஸ்.பி.அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம்

நாகை மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் தலைமை தாங்கி, பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். பின்னர் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 17 மனுக்களை பெற்று, பெறப்பட்ட மனுக்களுக்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
News October 29, 2025
நாகை: இ-ஸ்கூட்டர் வாங்க மானியம் வேண்டுமா?

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. விண்ணபிக்க <