News May 7, 2025

திருவள்ளூர் அருகே போலி மருத்துவர் கைது

image

திருவள்ளூர் மாவட்டம் நசரேத்பேட்டையை சேர்ந்த 9 வகுப்பு மட்டுமே படித்த எஸ்தர்(32) என்ற பெண் கிளினிக் நடத்தி மருத்துவம் பார்ப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து, மருத்துவர் பாபு தலைமையில் அதிகாரிகள் அங்கு சோதனைக்கு சென்றனர். அப்போது ஒருவர் வயிறு வலி என நடித்தார். தொடர்ந்து, அவருக்கு ஊசி போட முயன்ற எஸ்தரை அதிகாரிகள் கைது செய்து, கிளினிக்கிற்கு சீல் வைத்தனர். *நண்பர்களுக்கு பகிர்ந்து உஷார் படுத்தவும்.

Similar News

News August 24, 2025

திருவள்ளூரில் ரூ.25,000 சம்பளத்தில் சூப்பர் வேலை!

image

திருவள்ளூரில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் மெஷின் ஆபரேட்டர் பணிக்கு 50 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எலெட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் & மெக்கானிக்கல் பிரிவில் ITI படித்திருந்தால் போதும். இந்த பணிக்கு சம்பளம் ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இந்த <>லிங்க்<<>> மூலம் அக்டோபர் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். திருவள்ளூரில் வேலை தேடுபவர்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க!

News August 24, 2025

திருவள்ளூர்: வீட்டு பத்திரம் தொலைந்தால் இதை பண்ணுங்க!

image

நிலம்/வீட்டின் பத்திரம் தொலைந்து விட்டால் அரசு அலுவலகத்துக்கு அலைய வேண்டாம். தற்போது தாலுகா அலுவலகம் செல்லாமலே வீட்டில் இருந்தபடியே இந்த <>லிங்க் <<>>மூலம் விண்ணப்பித்து பத்திர நகலை பெற முடியும். பத்திரம் மட்டுமல்லாமல் உங்கள் சொத்து பற்றிய பட்டா, வில்லங்க சான்றிதழ் போன்ற விபரங்களையும் இதன் மூலம் நீங்கள் பெற முடியும். மேலும் விபரங்களுக்கு உங்க பதிவு அலுவலகத்தை (04427661230) தொடர்பு கொள்ளுங்க.

News August 24, 2025

தனியார் பேருந்தில் கஞ்சா கடத்திய வாலிபர் கைது

image

திருத்தணி அருகே உள்ள பொன்பாடி சோதனை சாவடியில் கஞ்சா கடத்தியதாக வாலிபர் கைது செய்யப்பட்டார். தனியார் பேருந்தில் சோதனை செய்த போது 12 கிலோ கஞ்சாவோடு இளைஞர் கையும் களவுமாக பிடிபட்டார். விசாரணையில் அவர் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த மோகன்ராஜ் என்பது தெரிய வந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது

error: Content is protected !!