News May 7, 2025
மனைவியை அடித்த கணவரின் சகோதரர் கொலை

சிவகங்கை: காரைக்குடி அருகேயுள்ள கல்லுவயலைச் சேர்ந்த ராஜா என்பவரது மனைவி பாண்டீஸ்வரிக்கும், ராஜாவின் சகோதரர் பாண்டிக்கும் இடம் சம்பந்தமாக வாக்குவாதம் ஏற்பட்டபோது, பாண்டி பாண்டீஸ்வரியை அடித்துள்ளார். தகவல் அறிந்து வந்த ராஜா, பாண்டியை ஆத்திரத்தில் அருகில் கிடந்த கட்டையை எடுத்து தாக்கினார். காயமடைந்த பாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நேற்று சோமநாதபுரம் போலீசார் ராஜாவை கைது செய்து விசாரிக்கின்றனர்.
Similar News
News May 8, 2025
ரூ.1 லட்சம் வழங்கிய நடிகர் ராகவா லாரன்ஸ்

பூவந்தி அருகே கிளாதரி கக்ணாம்பட்டியை சேர்ந்த குமார், முத்துகருப்பி தம்பதியினர் தனது குழந்தைகளின் காதணி விழாவிற்காக ரூ.1 லட்சம் பணத்தை சேமித்து ஒரு தகர டப்பாவில் போட்டு மண்ணில் புதைத்து வைத்திருந்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு அதை பார்க்கும் பொழுது பணம் கரையான்களால் பறிக்கப்பட்டிருந்ததை கண்டு வேதனை அடைந்தனர். இதை அறிந்த நடிகர் ராகவா லாரன்ஸ் இன்று தம்பதியை நேரில் அழைத்து ரூ.1 லட்சம் வழங்கினார்.
News May 7, 2025
சிவகங்கை: காவல்துறை அதிகாரிகளின் தொடர்பு எண்கள்

▶️ஆஷிஷ் ராவத் ஐபிஎஸ் – 04575-240427 (எஸ்.பி)
▶️பி.கலைகதிரவன் – 04575-243244 (ஏ.டி.எஸ்.பி)
▶️எல்.பிரான்சிஸ் – 04575240587 (ஏ.டி.எஸ்.பி)
▶️சி.உதயகுமார் – 9498164247(ஏ.டி.எஸ்.பி)
▶️திருப்பத்தூர் – 04577-26213 (டி.எஸ்.பி)
▶️தேவக்கோட்டை- 04561-273574 (டி.எஸ்.பி)
▶️காரைக்குடி – 04565-238044 (டி.எஸ்.பி)
▶️மானாமதுரை- 04574-269886 (டி.எஸ்.பி)
▶️சிவகங்கை – 04575-240242 (டி.எஸ்.பி) *ஷேர் பண்ணுங்க
News May 7, 2025
சிவகங்கை மாவட்டத்தில் 4 ரயில் நிறுத்தம்

கோயமுத்தூர் – ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் வாரந்தோறும் பிரதி புதன்கிழமை சிவகங்கை மாவட்ட ரயில் நிலையங்களான காரைக்குடி சந்திப்பு, தேவகோட்டை ரோடு, சிவகங்கை, மானாமதுரை சந்திப்பு வழியாக நின்று செல்லும் கால புதிய கால அட்டவணை வெளியாகி உள்ளது. சிவகங்கை மாவட்ட ரயில் பயணிகள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அறிவிக்கலாம் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. *ஷேர் பண்ணுங்க