News May 7, 2025
பண்ருட்டி: திருமணமான 9-ஆவது மாதத்தில் இளைஞர் விபத்தில் பலி

பண்ருட்டி பி.என்.பாளையத்தை சேர்ந்தவர் தினேஷ் (27). இவருடைய மனைவி ஜெனிதா (19). இவர்களுக்கு திருமணமாகி 9 மாதங்களே ஆகிறது. இவர் நேற்று ராசாப்பாளைம் -கட்டமுத்துப்பாளையம் சாலையில் டூவீலரில் சென்றபோது திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த தினேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து பண்ருட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News August 22, 2025
கடலூர்: சிலிண்டர் புக் பண்ண ஈஸியான வழி

கேஸ் சிலிண்டரை புக்கிங் செய்ய போனில் இருந்து ஒரு SMS அனுப்பினாலே போதும். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். இதுவே பாரத் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கு மெசேஜ் அனுப்பி அலைச்சல் இல்லாமல் சிலிண்டரை புக்கிங் செய்யலாம். இத்தகவலை இல்லத்தரசிகளுக்கு ஷேர் பண்ணுங்க!
News August 22, 2025
கடலூரில் கொள்ளையர்கள் கைவரிசை

கடலூர் அருகே சேடப்பாளையத்தை சேர்ந்தவர் கமலக்கண்ணன் (36). சமையல் தொழிலாளியான இவர், சம்பவத்தன்று இரவு தன் வீட்டின் கதவுகளை திறந்து வைத்து விட்டு வெளியே படுத்து உறங்கியுள்ளார். இதனை நோட்டமிட்ட கொள்ளையர்கள் சாமர்த்தியமாக வீட்டில் புகுந்து, அங்கிருந்த 2½ பவுன் தங்கம், வெள்ளி, செல்போன்கள் என ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து முதுநகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News August 22, 2025
கடலூர்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்!

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில், மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று (21/08/2025) இரவு கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.